Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 06 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிஸ் ஹோட்டல் மனேஜ்மன்ட் அகடமியுடன் (SHMA), Cinnamon Hotels & Resorts கைகோர்த்து, Cinnamon Hospitality Academy அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த சுவிஸ் விருந்தோம்பல் கல்வியை தொழிற்பயிற்சி கல்வி மற்றும் பயிற்சியினூடாக (VET), Ecole hôtelière de Lausanne (EHL) நிபுணத்துவ டிப்ளோமாவை இலங்கையில் பெற்றுக் கொடுத்து, இலங்கையில் விருந்தோம்பல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது இந்த கைகோர்ப்பின் இலக்காக அமைந்துள்ளது.
Cinnamon Hospitality Academy இல் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட EHL தகைமையை பெற்றுக் கொள்வதற்கான பிரத்தியேக வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. உலகின் முதல் தர விருந்தோம்பல் முகாமைத்துவ பல்கலைக்கழகமாக EHL தரப்படுத்தப்பட்டுள்ளது. சுவிஸ் ஆற்றல் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட EHL பாடவிதானம், உயர் தகைமை வாய்ந்த நிபுணர்களை தயார்ப்படுத்துவதில் புகழ்பெற்றுள்ளதுடன், தொழிற்துறை தொடர்பான பிரயோக திறன்கள் மற்றும் ஆழமான புரிதல்கள் ஆகியவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
18 மாத முழுநேர நிபுணத்துவ டிப்ளோமா கற்கைநெறியான EHL இன் VET கற்கை அமைந்திருப்பதுடன், ஒரு வருட கால தொழிற்பயிற்சி அனுபவத்தை வழங்கி, மொத்தமாக இரண்டரை வருட கால அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. பாடவிதானம் நிஜ உலக அனுபவத்தை இணைத்து, பிரயோக முகாமைத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் கல்விசார் அடிப்படைகளை வழங்கி, மூன்று விசேடத்துவ வழிகளான Culinary, F&B Service மற்றும் Hotel Operations ஆகியவற்றை வழங்குகின்றது. இந்த கற்கை மாதிரியில் இரு நாள் பிரயோக மற்றும் கோட்பாட்டு ரீதியான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், நான்கு நாட்கள் தொழில்சார் பயிற்சி Cinnamon Hotels & Resorts Colombo hotels இல் வழங்கப்படும்.
Cinnamon Hotels & Resorts மற்றும் A. Baur & Co. Pvt Ltd (பவர்) இன் துணை நிறுவனமான SHMA உடனான பங்காண்மை இலங்கையின் விருந்தோம்பல் துறைக்கு மிகவும் முக்கியமானது. ஏ.பவர் அன்ட் கம்பனி பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளர் ரொல்ஃப் பிளாசர் கருத்துத் தெரிவிக்கையில், “Cinnamon Hotels & Resorts உடன் இணைந்து, உலகின் முதல்தர கல்விச் சேவைகள் வழங்குநரான EHL இன் VET கற்கையை வழங்க முன்வந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நாட்டின் விருந்தோம்பல் கல்வித் துறையில் இது மாபெரும் முன்னேற்றமாக அமைந்துள்ளது. உயர் திறன் படைத்த நிபுணர்களை உருவாக்குவதற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது.” என்றார்.
Cinnamon Hotels & Resorts இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மிக்கெல் ஸ்வென்சன் கருத்துத் தெரிவிக்கையில், "இந்தப் பங்காண்மை Cinnamon Hotels & Resorts க்கு மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திராமல், இலங்கையின் விருந்தோம்பல் துறைக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தத் துறை மீட்சியடைந்து வரும் வகையில் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இலங்கையின் முன்னணி விருந்தோம்பல் வர்த்தக நாமம் எனும் வகையில் நாம் SHMA உடனான கைகோர்ப்பினூடாக அங்கீகாரம் பெற்ற EHL கற்கைகளை வழங்க முன்வந்துள்ளோம். உலகின் முதல் தர விருந்தோம்பல் முகாமைத்துவ கல்வியகத்தின் கற்கைகளுடன் கைகோர்த்துள்ளமையானது, இலங்கையின் விருந்தோம்பல் கல்வியை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. The Cinnamon Hospitality Academy என்பது திறன் இடைவெளியை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி, கல்வி மற்றும் பயிற்சியில் புதிய எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும் என்பதுடன், இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நாட்டிலிருந்து வெளியேறாமல் வலுவூட்டும் வகையில் அமைந்திருக்கும். 'Learn, Work & Earn' மாதிரியினூடாக, உற்பத்தித்திறன் இழப்பை குறைப்பதுடன், சேவைச் சிறப்பை பேணவும் ஏதுவாக அமைந்திருக்கும்.” என்றார்.
EHL இன் (தெற்காசியா, மியன்மார் மற்றும் மத்தியகிழக்கு) பிராந்திய தலைமை அதிகாரியும் பணிப்பாளருமான அமான் ஆதித்யா சச்தேவ் கருத்துத் தெரிவிக்கையில், “Cinnamon Hotels & Resorts மற்றும் SHMA இடையிலான கைகோர்த்து, கொழும்பில் Cinnamon Hospitality Academy ஐ நிறுவி, அதனூடாக உலகத் தரம் வாய்ந்த EHL இன் VET கற்கைகளை வழங்க முன்வந்துள்ளதை அவதானிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். உலகப் புகழ்பெற்ற சுவிஸ் ஆற்றல் கட்டமைப்பின் அடிப்படையில், இந்தக் கற்கைகளினூடாக, சர்வதேச விருந்தோம்பல் துறையில் நிலைத்திருப்புக்கு அவசியமான அறிவு, ஆற்றல் மற்றும் மனநிலையை பெற்றுக் கொள்ள முடியும். தற்போது இந்த கற்கைகள் 17 நாடுகளில் வழங்கப்படுகின்றன.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
47 minute ago
56 minute ago