Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL மற்றும் STEMUP மையம் ஆகியன இணைந்து, SLT-MOBITEL இன் வெலிசறை, மொரட்டுவ மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பயிற்சி நிலையங்களினூடாக இலவச coding நிகழ்ச்சித் திட்டங்களை சிறுவர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளன. கொழும்பு, மட்டக்களப்பு, கிரிமட்டியான, ஹங்குரான்கெத்த மற்றும் தொலுவ ஆகிய பகுதிகளிலுள்ள பொது நூலகங்களிலும் இந்த இலவச coding நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும், இலங்கை தேசிய நூலகத்துடன் இணைந்து, 2023 டிசம்பர் மாதமளவில், நாடு முழுவதிலும் காணப்படும் மொத்தம் 15 பொது நூலகங்களுக்கு இந்த இலவச coding நிகழ்ச்சித் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு SLT-MOBITEL திட்டமிட்டுள்ளது.
இந்த இலவச coding நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கும் நடவடிக்கையானது, டிஜிட்டல் யுகத்தில், ஆழமாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தல், எதிர்காலத்துக்கு பொருத்தமான திறன்களை கட்டியெழுப்பல், நாட்டின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கல் போன்ற SLT-MOBITEL இன் நம்பிக்கைகளுக்கமைய சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதாக அமைந்துள்ளது.
STEMUP மையம் என்பது இலாப நோக்கற்ற நிறுவனமாக திகழ்வதுடன், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) கல்வியில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதாக அமைந்துள்ளது.
இந்த நீடிப்பின் பிரதான நோக்கம், மாணவர்களுக்கு STEM கல்வியை நூலகங்களில் இலவசமாக பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. குறிப்பாக, தன்னார்வ செயற்பாட்டாளர்கள் தமது நேரத்தையும், அறிவையும் ஒதுக்கீடு செய்து இந்த நிகழ்ச்சிகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்குபவர்களாக இணைந்து, சிறுவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
'CoderDojo@SLT' Coding என்பது STEM கல்வியை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், ஆழமான சிந்திக்கும் திறன்கள், ஆக்கத்திறன், ஒன்றிணைந்த செயற்பாடு மற்றும் தொடர்பாடல் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது. இந்த திறன்கள் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களினூடாக, மாணவர்களுக்கு தமது ஆய்வு பிரச்சனைகள் தொடர்பில் தேடல்களை மேற்கொள்ளவும், மாறுபட்ட நிலைகளிலிருந்து தீர்வுகளை இனங்காணவும் ஊக்குவிக்கப்படுவார்கள்.
வருடம் முழுவதும் மாதாந்தம் இந்த நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சிறுவர்களுக்கு தமது coding திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புகளை வழங்கும். நிறுவனத்தின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் சிறந்த வாய்ப்பாக இந்த நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.
8 முதல் 17 வரையான எந்தவொரு பிள்ளையையும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்து கொள்ளுமாறு SLT-MOBITEL அழைப்புவிடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago