2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிறுவர்களின் ஒன்லைன் பயிலலுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ ஆதரவு

S.Sekar   / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு பிள்ளைக்கு இடைவிடாத கல்வியைத் தொடரும் வாய்ப்பை வழங்குவது எனும் யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ இன் கொள்கையின் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் ஒன்லைன் பயிலலுக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

397 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு டப்லெட்கள் மற்றும் மடிக்கணனிகள் விநியோகிக்கப்பட்டிருந்ததுடன், நாடு முழுவதையும் சேர்ந்த 10,632 சிறுவர்களை உள்வாங்கி யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் இதர ஏழு நிறுவனங்களின் அனுசரணையில் இவை அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.

தொற்றுப் பரவல் காரணமாக சிறுவர்களின் கல்வியில் இடைவெளி நீடிக்கப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் முறையில் கல்வியைத் தொடர வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. பல சிறுவர்களுக்கு கணனி அல்லது டப்லட் ஒன்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அல்லது  இல்லாத சூழல் காணப்படுகின்றமையால் அவர்களின் எதிர்காலம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

“அனைத்தையும் விட முன்னர் சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்த தேசிய சிறுவர் தின நிகழ்ச்சிகளின் அங்கமாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்துக்கு 50 சாதனங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் பங்களிப்புச் செய்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸின் Sisumaga+ என்பது, பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள உதவும் காப்புறுதித் தீர்வாக அமைந்திருப்பதுடன், ஒவ்வொரு பிள்ளைக்கும் தடங்கலில்லாத கல்விக்கான உறுதி மொழியை வழங்குவதாகவும் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .