Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 22 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி வியாபார சஞ்சிகையாக மூன்று தசாப்த காலத்தை பூர்த்தி செய்திருந்தமையை குறிக்கும் வகையில், 25 சிறந்த கூட்டாண்மை நிறுவனங்களை கௌரவிக்கும் “LMD விருதுகள் இரவு” எனும் பெருமைக்குரிய நிகழ்வை Lanka Monthly Digest (LMD) அண்மையில் முன்னெடுத்திருந்தது. இந்த வர்ணமயமான நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்ற நிறுவனங்களில் SLT-MOBITEL அடங்கியிருந்தது. இந்நிகழ்வு சினமன் லைஃப் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 30 வருட காலப்பகுதியில் சஞ்சிகையின் Brands Annual, LMD 100, நன்மதிப்பை வென்ற மற்றும் அதிக விருதுகளுடனான தரப்படுத்தல் போன்றன அடங்கலாக விசேட வெளியீடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்த முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களை கௌரவிப்பதாக LMD விருதுகள் இரவு அமைந்திருந்தது. தமது தொழிற்துறைகளில் தொடர்ச்சியாக சிறப்பு மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்தியிருந்த நிறுவனங்களை வெளிக் கொண்டுவரும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தேசத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் சிறந்த நிலையில் காணப்படும் நிறுவனமாகும். பரந்த வலையமைப்பு மற்றும் நிலையான, மொபைல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை நாடு முழுவதிலும் வழங்குவதனூடாக, இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது.
புத்தாக்கத்துக்கான தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீள உறுதி செய்து, நிலையான மற்றும் மொபைல் தொலைபேசி, புரோட்பான்ட், டேட்டா சேவைகள், இணைய இணைப்பு தொலைக்காட்சி (IPTV), cloud computing, hosting services மற்றும் மேம்படுத்தப்பட்ட வலைப்பின்னல் தீர்வுகள் போன்றன அடங்கலாக பல்வேறு சேவைகளை வழங்குகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .