Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 14 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி 2023-24 ஆம் ஆண்டிற்கான ‘LMD 100’ பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது, LMD சஞ்சிகையினால் கௌரவத்துக்குரிய பெரு நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் பட்டியலில் இம்முறை கொமர்ஷல் வங்கி, ஐந்து இடங்கள் முன்னேறி 'இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த சமீபத்திய LMD தரவரிசையின் மூலம் கொமர்ஷல் வங்கி, LMD 100 இல் உயர்ந்த தரவரிசையில் உள்ள வங்கி என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், LMD இன் முதன்மை தரவரிசையை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தின் அடிப்படையில் நாட்டின் மிகப் பாரிய பல்வகைப்பட்ட வர்த்தக குழுமங்களை முந்தியுள்ளது.
31 வருடங்களுக்கு முன்னர் முதன்முதலில் வெளியிடப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வருடமும் LMD தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருந்த பெருமையும் கொமர்ஷல் வங்கிக்கு உண்டு.
'LMD தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றதில் வங்கி உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறது, இது கடந்த நிதியாண்டில் எங்களது வலுவான செயல்திறனுக்கான சான்றாகும்' என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க தெரிவித்தார். 'இது வங்கியின் உள்ளார்ந்த நிதியியல் வலிமை, ஆழமாக வேரூன்றிய நிலை மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றின் தெளிவான நிரூபணமாகும். இந்த தரவரிசையானது, கொமர்ஷல் வங்கி குழுமத்தின் நெருக்கடியான சூழ்நிலையில் வளர்ச்சியை அடைவதற்கான அர்ப்பணிப்புக்கும் வழங்கப்பட்ட ஒரு கௌரவமாகும்.
இலங்கையின் முன்னணி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விற்பனைப்புரள்வு அடிப்படையிலான முதன்மை தரவரிசைக்கு மேலதிகமாக, LMD நிறுவனங்களை துறை மற்றும் மொத்த சொத்துக்கள், வரிக்குப் பிந்தைய இலாபம், பங்குதாரர்களின் நிதிகள், சந்தை மூலதனமாக்கல் மற்றும் பிற செயல்திறன் குறிகாட்டிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது. LMD 100 தரவரிசையானது நாட்டின் பல முன்னணி கூட்டு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் பிற துறைத் தலைவர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட வங்கிகளை உள்ளடக்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
29 minute ago
39 minute ago