Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 01 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CKH) நிறுவனம் தேசிய நீண்டகால அடிப்படையிலான தரப்படுத்தலான ‘AA+(lka)/Stable’ தகுதி நிலையை மீண்டும் பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக Fitch இடமிருந்து தகுதி நிலை உறுதிப்படுத்தலைப் பெற்றுள்ளது. உள்ளுர் வாகனங்களுக்கான டயர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் அதன் உறுதியான நிதி நிலை என்பனவற்றை மீண்டும் பிரதிபலிக்கும்; வகையில் இது அமைந்துள்ளதாக தரப்படுத்தல் முகவராண்மை அறிவித்துள்ளது.
Fitch தரப்படுத்தல் வெளியிட்டுள்ள அறிவித்தலில் 'இந்த உறுதிப்பாடும் நிலையான வெளிப்பாடும் CKH ஆனது தனது விரிவாக்கல் திட்டங்கள் மற்றும் இன்னமும் பலவீனமான செயற்பாட்டு சுற்றாடல்கள் என்பனவற்றையும் தாண்டி போதுமான கடன் அளவீடுகள் மற்றும் பணப்புழக்கம் என்பனவற்றைப் பேணக் கூடியது என்ற எமது கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றது.
டயர்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளமையால். உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கான போட்டியை இது அதிகரித்துள்ளது. ஆனால் CKH அதன் உறுதியான வர்த்தக முத்திரை மற்றும் விநியோக வலையமைப்பு, இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் விலைகளின் நலன் என்பன காரணமாக தனது சந்தை நிலையை தக்க வைத்துக் கொள்ளும் என்று நாம் நம்புகின்றோம்' என்று தெரிவித்துள்ளது.
AA+ கடன் தரப்படுத்தலானது Fitch தரப்படுத்தலால் வழங்கப்படும் இரண்டாவது உயர் நிலை தரமாகும். ஒரு நிறுவனம் தனது நிதி சம்பந்தமான நிலைமைகள், கடமைகள் என்பவற்றை சந்திக்கும் ஆற்றல் கொண்டது என்பதை பிரதிபலிக்கும் வகையில் இது வழங்கப்படுகின்றது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கான முக்கியமான தரப்படுத்தல், டயர்களுக்கான கேள்விகளை திட்டமிட்ட வகையில் படிப்படையாக சந்திக்க வல்லது என்ற ஆற்றல் நிலை, புதிய சந்தைகளிள் வளர்ச்சி, உறுதியான சந்தை நிலை என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த தரப்படுத்தல் பற்றி கருத்து வெளியிட்ட சியெட் நிறுவனத்தின் தலைவர் சானக்க டி சில்வா 'இலங்கையின் தனிப்பெரும் டயர் உற்பத்தியாளர்கள் என்ற வகையில் கடந்த மூன்று வருடங்களாக எமது தரப்படுத்தல் நிலையில், சவால்கள் மிக்க வெளிக் காரணிகளுக்கு மத்தியிலும் மாற்றம் ஏற்படாமல் இருப்பது எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இது ஒரு தொடர் நிலைத்தன்மைக்கான குறிப்பிடத்தக்க சான்றாகவும், பங்குதாரர்கள் அனைவருக்கும் உறுதியளிக்கும் ஒரு நெகிழ்ச்சிமிக்க நிலையாகவும், வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிப்பதாகவும், வர்த்தக பங்காளிகளுக்கு அதிஉயர் தரமான உற்பத்திகளை ஏற்ற இறக்கம் உள்ள சந்தை நிலையிலும் கூட இடையூரற்ற விதத்தில் விநியோகிக்கும் வகையிலும் அமைந்துள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago