Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 06 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியட் களனி நிறுவனம் அண்மையில் அதன் ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் மர நடுகைத் திட்டத்தில் ஈடுபட வைத்தது. ஒரு தொழில்துறையில் சூழல் நிலைப்பேற்றை ஒரு சிலர் மட்டும் உச்சரிக்கும் மந்திரமாக அன்றி, அதற்கான அர்ப்பணிப்பில் ஒவ்வொருவரையும் ஈடுபட வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சியெட் டயர் உற்பத்தியாளர்களின் சமகால மரநடுகைத் திட்டம் அதன் களனி மற்றும் களுத்துறை வளாகங்களில் ஏக காலத்தில் இடம்பெற்றன. இதன்போது ஊழியர்களுக்கு ஆயிரம் மரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. அந்த மரக்கன்றுகளை அவர்கள் தமது வீட்டுத் தோட்டங்களில் நட்டு பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இவை வழங்கப்பட்டுள்ளன.
சியெட் களனி முகாமைத்துவப் பணிப்பாளர் ரவி தத்லானி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஊழியர் தொழில்சங்க பிரதிநிதிகள், நிறுவனத்தின் அலுவலக மற்றும் தொழில்சாலை ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
'எமது சுற்றாடல் பாதிப்புக்களை குறைக்கும் வகையிலான பல திட்டங்களில் நாம் ஏற்கனவே கணிசமான முதலீடுகளை செய்துள்ளோம். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாமே சிரேஷ்ட முகாமைத்துவத்தின் முடிவுகளாகவே அமைந்துள்ளன' என்று ரவி தத்லானி கூறினார். 'எவ்வாறாயினும் பசுமையாக்கம் என்பது ஒவ்வொரு ஊழியரதும் ஆன்மாவில் ஊடுறுவ வேண்டிய ஒன்றென நாம் கருதுகின்றோம். அப்போதுதான் சாத்தியமான அளவு ஆகக் கூடுதலான தாக்கத்தை உருவாக்க முடியும். இந்த மர நடுகைத் திட்டத்தின் நோக்கமும் அதுவேயாகும்' என்று அவர் மேலும் கூறினார்.
சியெட் களனி ஹோல்டிங்ஸ் ஏற்கனவே மேற்கொண்டு வரும் நிலைப்பேற்று முயற்சிகளில் முக்கிய ஒன்றாக விரைவில் அமுல் செய்யப்படவுள்ள மிகப் பெரிய சூரிய சக்தி திட்டம் அமையவுள்ளது. நிர்வாக மற்றும் விற்பனை செயற்பாட்டில் கடதாசி நுகர்வை குறைத்து கடதாசி பாவணையற்ற ஒரு அலுவலகத்தை ஸ்தாபித்தல் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல், வர்த்தக முடிவு செயற்பாட்டில் பல்வகையான 3R செயற்பாடுகள் (Reduce, Reuse, Recycle – குறைத்தல், மீள்பாவனை, மீள் சுற்று) என்பனவும் இதில் அடங்கும்.
சியெட் களனி ஹோல்டிங்ஸில் குறிப்பாக நிலைப்பேற்று கண்ணோட்டங்களில் உற்பத்தி வடிவமைப்பு, அபிவிருத்தி, உற்பத்தி படிமுறை என்பனவற்றிலும் விரிவு படுத்தப்பட்டுள்ளன. சியெட் 'செக்யூரா டிரைவ்' டயர் உற்பத்தி தொடரானது குறைந்தளவு எரிபொருளை நுகர்ந்து கூடுதலான அளவு மைல்கள் தூரத்தை தாண்டக் கூடிய தன்மையோடு பயணிக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை சியெட் 'பியுல் ஸ்மார்ட்' வகை சார்ந்த டயர்கள் அதன் பெயர் பிரதிபலிப்பதைப் போலவே எரிபொருள் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சியெட் களனியின் உற்பத்தி வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செயல் தொடரில் உகந்த அளவு எடையுடன் செயற்பாட்டுத் திறனும் உயர் ரக மீள் செயற்பாட்டு திறன் கொண்டதாகவும், சுற்றாடல் நலன் சார்ந்ததாகவும் உற்பத்திகளை உருவாக்கும் திட்டங்களும் உள்ளன. உற்பத்திகளில் குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தும் பொறிமுறைகளை அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. மீள புதுப்பிக்கக் கூடிய சக்தியை அதிகமாக பயன்படுத்தல் மற்றும் சக்திப் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பனவற்றை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago