2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

சஞ்சாரக உதாவ நிகழ்வில் Sun Siyam பாசிகுடா பங்கேற்பு

Freelancer   / 2024 மே 31 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் விருந்தோம்பல் ஹோட்டல் வர்த்தக நாமமான Sun SIyam ரிசோர்ட்ஸ் இன் அங்கமாக திகழும் Sun SIyam பாசிகுடா, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சஞ்சாரக உதாவ 2024 வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றிருந்தது. துறைசார் விருந்தினர்களிடமிருந்து இந்த காட்சிகூடத்துக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்தது.

பதினோராவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சஞ்சாரக உதாவ ‘The Travel & Tourism Fair’ 2024 கண்காட்சியை, இலங்கை உள்ளக சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சம்மேளனம் (SLAITO) அதன் பிரதான நிகழ்வு பங்காளரான இலங்கை சுற்றுலாவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.  மே 17 – 18 ஆகிய தினங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடு முழுவதையும் சேர்ந்த 10,000 க்கும் மேலாக பார்வையாளர்கள் பங்கேற்றதுடன், 500க்கும் அதிகமான காட்சிகூடங்கள் நிறுவப்பட்டிருந்தன.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் C169 மற்றும் C176 ஆகிய இரு காட்சி கூடங்களைக் கொண்டிருந்தது. விருந்தினர்களுக்கு பொருந்தும் வகையில் அமைந்திருந்த இந்த ஹோட்டல் காட்சிகூடம் Sun Siyam இன் சிறந்த வரவேற்பு உபசரிப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

பொது முகாமையாளர் அர்ஷத் ரிபாய் கருத்துத் தெரிவிக்கையில், “முதன் முறையாக சஞ்சாரக உதாவ கண்காட்சியில் நாம் பங்கேற்றிருந்ததையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம். தொழிற்துறையைச் சேர்ந்த ஏனையோருடன் கைகோர்த்து, உலகின் சகல பாகங்களையும் சேர்ந்த விருந்தினர்களுக்கு எமது நாட்டின் பிரத்தியேகமான அம்சங்களை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கிழக்கின் விருந்தோம்பல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க நாம் எதிர்பார்த்ததுடன், அதை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது.” என்றார்.

கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் Sun Siyam பாசிகுடா தனது மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஹோட்டலை மீளத்திறந்திருந்தது. உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட மூலப் பொருட்கள் மற்றும் உள்நாட்டில் பெறப்பட்ட தயாரிப்புகளிலிருந்து தமது ஹோட்டலை அலங்கரித்திருந்ததுடன், உள்நாட்டு கலைஞர்கள் மற்றும் சமூகத்தாருடன் இணைந்து தளபாடங்கள், chandeliers மற்றும் joinery பொருட்களை வடிவமைத்திருந்தது. அதன் Studio Sixty7 அலங்கார வடிவமைப்பாளர்களுடன், உள்நாட்டு வடிவமைப்புகளை மேம்படுத்தியிருந்ததுடன், பெருமளவு பிரத்தியேகமான உள்ளம்சங்களையும் காட்சிப்படுத்தியிருந்தது. அதனூடாக பாசிகுடா கரையோரப் பகுதியின் சிறந்த காட்சியமைப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

Sun Siyam பாசிகுடாவில் 34 இடவசதிகளைக் கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கையறைகள் பூந்தோட்டம் மற்றும் கடற்கரையை முகப்பாகக் கொண்ட பெவிலியன்களைக் கொண்டு அமைந்துள்ளன. சிறந்த உள்ளக காட்சியமைப்புகள், வர்ண அமைப்புகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. infinity pool அனுபவம் அல்லது karaoke இல் மனம் விரும்பியதைப் போல பாடல் பாடுவது. ஸ்பா சிகிச்சைகளுடன் ஓய்வு பெறுவது அல்லது டெனிஸ் அல்லது பூப்பந்தாட்டத்துடன் உடல்நிலையை திடமாக வைத்திருப்பது போன்ற அனுபவங்களைப் பெறலாம். உள்நாட்டு கலாசாரத்துடன் இணைவது அல்லது பாசிக்குடாவின் கரையோரத்தில் படகுகளில் சவாரி செய்வது, நட்சத்திரங்களின் கீழ் பிரத்தியேகமான இராப்போசணத்தை அருந்தி மகிழ்வது போன்ற பல சிறந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கிழக்கு பிராந்தியத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மத்தியில், நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் Sun Siyam பாசிகுடா முக்கிய பங்காற்றுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .