Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஹேமாஸ் FMCGஇனால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த கிருமி நீக்கும் ஆற்றல் படைத்த சுகாதார சவர்க்காரமான ஷீல்ட் பங்களிப்பு வழங்கியிருந்தது.
வைரஸ் தொற்றுப் பரவல் நாட்டின் குடிமக்களை பாதிக்காத வகையில் தவிர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு கடந்த மாதங்களில் ஹேமாஸ் FMCG பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியிருந்தது. ஷீல்ட் தயாரிப்புகள் அடங்கலாக பெருமளவு ஹேமாஸ் FMCG பிரத்தியேகப் பராமரிப்புத் தயாரிப்புகள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் பயன்படுத்துவதற்காக, இலங்கை இராணுவத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன.
இலங்கை தேசிய வைத்தியசாலை, ராகம - கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றின் பொறுப்பதிகாரிகளுக்கு ஷீல்ட் சனிடைசர் பொதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. அத்துடன், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் முன்னிலை ஊழியர்களின் பயன்பாட்டுக்காக பெருமளவு ஷீல்ட் சவர்க்காரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன.
மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தொடர்வதற்காக மீண்டும் பாதுகாப்பான வகையில் பாடசாலைகளுக்கு திரும்பும் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஹேமாஸ் FMCG, பாதுகாப்பான, கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்ட சூழலை உறுதி செய்வதற்காக சுத்தமான நீர், சவர்க்காரம் கொண்டு கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக பங்களிப்பு வழங்க முன்வந்திருந்தது.
பாடசாலைகளுக்கு மீளத்திரும்பிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கைகளைக் கழுவும் பகுதிகள், ஷீல்ட் சவர்க்காரப் பொதிகள் போன்றவற்றை ஹேமாஸ் FMCG வழங்கியிருந்தது. மேல் மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு ஷீல்ட் சவர்க்காரப் பொதிகளை ஹேமாஸ் நன்கொடையாக வழங்கியிருந்தது. கொழும்பு வடக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த சகல பாடசாலைகளையும் உள்வாங்கும் வகையில் இந்த விநியோகத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
இதனூடாக சுமார் 15,000க்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சவர்க்காரப் பொதிகளை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் கிரான்ட்பாஸ், புனித அந்தோனியார் சிங்கள வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட கோரிக்கைக்கமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டிருந்தது. இப்பிராந்தியத்தைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன், அவர்களிடம் அவர்களின் பாடசாலைகளுக்குரிய ஷீல்ட் சவர்க்காரப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளுக்கும் சவர்க்காரப் பொதிகளை விநியோகிப்பதற்கு ஹேமாஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது.
ஹேமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஃபியோனா ஜுரியான்ஸ் முனசிங்க இந்தத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
“தமது பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் பல பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். நாம் வழங்கியுள்ள ஷீல்ட் சவர்க்காரங்களினூடாக பாடசாலைகளுக்கு அவசியமான உதவியைப் பெற்றுக் கொடுத்து, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும் எனக் கருதுகின்றோம். குறிப்பாக அவர்கள் பாதுகாப்பான சூழலில் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதை உறுதி செய்யும் சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
ஹேமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் சுபிர் சௌத்ரி கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், தேசத்துக்கு பங்களிப்பு வழங்குவதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். கல்வி அமைச்சுக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க நாம் முன்வந்துள்ளோம். அதனூடாக, பாடசாலைகளுக்கு மாணவர்கள் மீளத்திரும்பும் முயற்சிகளுக்கு எம்மால் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது” என்றார்.
சருமவியல் ரீதியாக பரிசோதிக்கப்பட்ட சவர்க்காரமாக ஹேமாஸ் ஷீல்ட் திகழ்வதுடன், சருமத்துக்கு பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரியைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஷீல்ட் சவர்க்காரம், சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை அகற்றுகின்றது. முழுக்குடும்பத்தின் பாவனைக்கும் உகந்த தயாரிப்பாக ஷீல்ட் சவர்க்காரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், ஒரிஜினல், கற்றாளை அடங்கிய ஹேர்பல் மற்றும் பாலின் நலச் செழுமை கொண்ட நரிஷ் ஆகிய தெரிவுகளில் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago