Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அனுபவ பொருளாதாரம்- இலங்கையை எவ்வாறு நிலையான முறையில் மீட்டமைத்தல், தொழிற்றுறையின் அனைத்துத் துறைகளுக்கும் பார்வையாளர்களைக் கொண்டு செல்லல்” என்பது, தொடர்பான இணைய மூலமான புதிய விழிப்புணர்வுக் கருத்தரங்குத் தொடரை, இலங்கைச் சுற்றுலாத்துறை கைகோர்ப்பு அமைப்பு முன்னெடுத்திருந்தது.
இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த நிபுணர் குழாமில், அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறையின் முன்னாள் பிரதித் தலைவர் அண்ட்ரூ பெயார்லி, டுவென்டி31 கொன்சல்டிங் நிறுவனத்தின் பங்காளர் ஒலிவர் மார்ட்டின், கைட்சர்ஃபிங் லங்காவின் இணை நிறுவுனரும் உரிமையாளருமான டில்சிறி வெலிகல ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர்.
2020 ஓகஸ்ட் மாதம் முதல், சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நவீனகால சுற்றுலாப் பயணிகளுக்கான பிரதான ஊக்குவிப்பாளர்களை, சுற்றுலா வணிகங்களும் பிரயாண இலக்குகளும் எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பது பற்றி, இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒலிவர் மார்ட்டின் இரண்டு வகையான பயணிகளின் உந்துதல், நடத்தை அடிப்படையில் அவர்களின் உந்துதல்களை எடுத்துரைத்தார். பொருள் நுகர்வு மூலம் இயக்கப்படும் பயணிகள், எப்பொழுதும் கூடை நிறைந்ததொரு பொருள் பட்டியலைச் சரிபார்க்க விரும்புகிறார்கள், ஈபிள் கோபுரம், கிரேட் பெரியர் ரீஃப் அல்லது சிகிரியாக் குன்றுக்கு வருகை தருவதன் மூலம், உணர்ச்சிபூர்வமான நுகர்வு மூலம் உந்தப்படும் பயணிகள் அனுபவங்களையும் உணர்ச்சி ரீதியான தொடர்பையும் தேடுகிறார்கள்.
ஆய்வின் அடிப்படையில், கொவிட்டு-19 க்குப் பிந்திய சூழலில், பொருள் நுகர்வுப் பயணிகளை விட, மிக விரைவில் ஓர் இடத்துக்கு மீண்டும் வருகை தரும் பயணிகளின் வகைகளும் இவைதான். அனுபவம்மிக்க பயணிகள், பயணிக்க வேண்டிய உணர்ச்சித் தேவையால் இயக்கப்படுகிறார்கள். அவர்கள், பயண இலக்கு, அதன் சமூகத்துடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கட்டியெழுப்பி உள்ளதால், அவர்கள் ஒரு பயண இலக்குக்குத் திரும்புகிறார்கள்.
அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட, நேர்த்தியாக அழகுபடுத்தப்பட்ட அனுபவங்களைத் தேடுவதில்லை. மாறாக, உண்மையானதும் ஊடாட்டமற்றதுமான உள் அனுபவங்களைத் தேடுகிறார்கள். அவை, தங்களை ஒரு பயண இலக்கில் மூழ்கடித்து, அந்த சமூகம், கலாசாரத்துடன் உண்மையிலேயே இணைக்க அனுமதிக்கின்றன.
மிகவும் எளிமையான சொற்களில், இந்தப் பயணிகள் ஒரு குளிரூட்டப்பட்ட சுற்றுலா பஸ்ஸின் ஜன்னலூடாகப் பார்க்கும் வெளித்தோற்ற இலங்கை அனுபவத்தில், ஆர்வம் குறைவாக உள்ள அதேவேளை, சமூகத்தின் கலாசாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு நேரடி அனுபவத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்.
தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் போது, டில்சிறி வெலிகல ஆண்டு முழுவதும் பார்வையாளர்களை ஒரு பயண இலக்குக்கு அழைத்து வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இதனால், வணிகமும் அதைச் சார்ந்திருக்கும் சமூகங்களும் பருவகால வருமானங்களுக்கு மட்டுப்படுத்தப்படாது. அது ஈர்க்கக்கூடிய பயணிகளின் வகைகளை மட்டுப்படுத்துவதால், ஒரு பயண இலக்கு, ஒரு விடயத்துக்காக மட்டும் அறியப்படக்கூடாது என்றும் அவர் நம்புகிறார்.
ஒரு வணிகமானது, இலக்குகளின் முக்கிய சொத்துகளைச் சுற்றி, பல தயாரிப்புகளை உருவாக்க முடியுமானால், அது பல்வேறு விதமான பார்வையாளர்களின் தொகுதியொன்றை ஈர்ப்பது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் விருந்தினர் வருகை காணப்படுவதையும் உறுதி செய்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
39 minute ago
25 Apr 2025
25 Apr 2025