Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 17 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவநாகரிக வர்த்தக நாமமான XIMIVOGUE இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளதுடன், இந்த வர்த்தகநாமத்தின் முதலாவது காட்சியறை மஹரகமவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய காட்சியறை அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுப்பாவனைப் பொருட்கள், சுகாதாரம், அழகுபடுத்தல், பருவகால உற்பத்திகள், பட்டு பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், டிஜிட்டல் சாதனங்கள், அலங்கார உற்பத்திகள், பைகள் மற்றும் காகிதாதிகள் போன்ற பல்வேறுபட்ட உற்பத்திகள் இங்கே கிடைக்கப்பெறுகின்றன.
கொரிய வடிவமைப்பு வர்த்தகநாமமான XIMIVOGUE, 2015 ஆம் ஆண்டில் சீனாவிலுள்ள குவாங்டோங், குவாங்சோ சர்வதேச நிதி மய்யத்தைத் தலைமையகமாகக் கொண்டு, 2015 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.
அன்று முதல் சர்வதேசரீதியாக இந்த வர்த்தகநாமம் வியாபித்துள்ளதுடன், உலகளவில் 47 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களை உள்ளடக்கி, 1,400 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளுடன் பாரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டு, மிக வேகமாக XIMIVOGUE பிரபலமடைந்துள்ளது.
இலங்கையில் இப்புதிய வர்த்தகநாமம் அறிமுகமாகின்றமை தொடர்பில் XIMIVOGUE Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான எம்.என்.எம். நஸ்மி கருத்து வெளியிடுகையில், “நவநாகரிகத்தையும் நுகர்வோரின் பொருட்கொள்வனவு அனுபவத்தையும் மேம்படுத்தி, இலங்கை மக்களுக்கு புதிய அம்சங்களை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையில் XIMIVOGUE அறிமுகமாகியுள்ளதன் மூலமாக, நாட்டிலுள்ள சில்லறை வர்த்தகத்துறையில் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ், வியக்க வைக்கும் விலைகளில் பெற்றுக்கொள்ளும் வகையில், தரமான சர்வதேச உற்பத்திகளின் பயனை, விவேகமான நுகர்வோர் அனுபவிக்க உள்ளனர். இப்புதிய வர்த்தகநாமம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்து, இலங்கையில் வர்த்தகநாம காட்சியறையில் பொருட்கொள்வனவை மேற்கொள்ளும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது” என்று குறிப்பிட்டார்.
மிகக்குறுகிய காலப்பகுதியில் இந்த வாழ்க்கைமுறை வர்த்தக நாமமானது அவுஸ்திரேலியா, இஸ்ரேல், சிங்கப்பூர், ரஷ்யா, ஈரான், மலேசியா, டுபாய், நேபாளம், துருக்கி, தாய்லாந்து, இந்தோனேசியா, ஓமான், குவைத், சவுதி அரேபியா, வியட்னாம் மற்றும் பல நாடுகளுக்கும் வியாபித்துள்ளது.
மிகச் சிறந்த தரம் என்பது XIMIVOGUE உற்பத்திகளின் விசேட குணாதிசயமாக உள்ளதுடன், சர்வதேச ரீதியாக இது பிரபலமடைந்துள்ளமையால், உற்பத்திகள் அனைத்தும் நியாயமான விலைகளில் கிடைக்கப்பெறுகின்றமையும் உறுதி செய்யப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago