Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரவுண்ஸ் நிறுவனத்தின் விவசாயப் பிரிவோடு புதியதோர் லீசிங் திட்டத்தில் இணைந்துள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் விவசாய சமூகத்துக்கு வலுவூட்டும் வகையில் அவர்கள் அதி நவீன தொழில்நுட்பத்தையும் உபகரணங்களையும் பெற்றுக் கொள்ளத்தக்கதாகவும் விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
2023 இறுதி வரை இந்த ஊக்குவிப்பு காலம் அமுலில் இருக்கும். TAFE வகை டிரக்டர்கள், Sumo மற்றும் Yanmar ரக அறுவடை இயந்திரங்கள் பிரவுன்ஸ் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு, பராமரிப்பு சேவைகளும் பிரவுண்ஸ் விவசாயப் பிரிவால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கொமர்ஷல் வங்கி லீசிங் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் லீசிங் வசதிகளின் கீழ் இவற்றைக் கொள்வனவு செய்யும் போது வழமையான வட்டி வீதத்தில் இருந்து ஒரு வீத கழிவு வழங்கப்படும். மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தின் பதிவுகளை அல்லது ஏனைய அரசு நிறுவனங்களின் கீழான பதிவுகளை பிரவுண்ஸ் நிறுவனம் இலவசமாகக் கையாளும் என வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பிரவுண்ஸ் விவசாய பிரிவு TAFE டிரக்டர் வகைகளின் தெரிவு செய்யப்பட்ட உற்பத்திகளுக்காக முதல் வருடத்துக்கான இலவச காப்புறுதியையும் பிரவுன்ஸ் விவசாயப் பிரிவு வழங்கும். அத்தோடு கொள்வனவு செய்யப்படும் சகல வகை டிரக்டர்களுக்கும் கட்டணங்கள் அற்ற நான்கு இலவச பராமரிப்பு சேவைகளும் வழங்கப்படும்.
அதேவேளை இந்த லீசிங் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் Yanmar மற்றும் Sumo அறுவடை இயந்திரங்களுக்கு முறையே மூன்று மற்றும் இரண்டு இலவச சேவைகளும் வழங்கப்படும்.
இந்த ஊக்குவிப்பின் குறிக்கோள்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கொமர்ஷல் வங்கி கவர்ச்சி மிக்க விஷேட வீதங்களில் வழமையான லீசிங் பொதிகளையும் வழங்கும். அதேபோல் வங்கியின் 'கண்ண வாரிகா' (பருவ கால கட்டணம்) தெரிவும் வாடிக்கையாளர்களின் வருமான வசதிக்கு ஏற்ப வழங்கப்படும். இதன் கீழ் லீசிங் கட்டணம் அறுவடை பருவத்தின் போது மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago