Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 29 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பசுமை கட்டிடச்சபையினால் (GBCSL) கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணக் கிளைக்கு பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது.
GBCSL இன் 2023 விருதுகள் வழங்கும் நிகழ்வில், கொமர்ஷல் வங்கிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கவுன்சிலின் பசுமை வணிகத் தலைமை விருது 2023 இல் வங்கித்துறையில் கௌரவமான குறிப்பையும் பெற்றது.
யாழ்ப்பாண கிளை GBCSL விருதைப் பெறும் மூன்றாவது கொமர்ஷல் வங்கிக் கிளையாகும். 2022 ஆம் ஆண்டில், வங்கியின் திருகோணமலைக் கிளை கோல்ட் தர மதிப்பீட்டு விருதைப்பெற்றது, 2020 ஆம் ஆண்டில், வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையில் உள்ள கொமர்ஷல் வங்கி கட்டிடம் பிளாட்டினம் மதிப்பீட்டு விருதை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலக்கம் 474, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணக் கிளையை உள்ளடக்கிய கட்டிடம், 1973 ஆம் ஆண்டு, இந்திய மெர்கன்டைல் வங்கியின் (எம்பிஐ) மூன்று கிளைகளை வங்கி கையகப்படுத்தியபோது, வங்கியின் வசம் வந்தது. இது 2020-21 இல் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளுக்காக மீண்டும் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
வங்கியின் இந்த கட்டிடம்- 100kW சூரிய கூரை அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது, இது தேவையான மின்சாரத்தில் பெரும் சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. அத்தோடு ஒரு மழைநீர் சேகரிப்பு வசதி, தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் அதன் சொந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவு முகாமைத்துவ அமைப்பு இவற்றோடு பகல் நேரத்தில் இயற்கை ஒளியை அதிகப் படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆற்றல் நுகர்வை குறைப்பதுடன் ஆற்றல்-திறனுள்ள குளிரூட்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் குளியலறையில் உள்ள பாகங்கள் அனைத்தும் நீர்-திறனுள்ளவை, கட்டிடத்தின் 'பசுமை' சான்றுகளை மேம்படுத்துகின்றன. கூடுதலாக, அதன் கட்டுமானத்தின் போது பச்சை- முத்திரையிடப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
GBCSL பசுமை வணிகத் தலைமை விருது, அதன் பசுமை வங்கி நடைமுறைகள், பசுமைச் சான்றிதழ்கள், செயல்பாட்டில் உள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள், CSR மற்றும் வங்கி ஈடுபட்டுள்ள தன்னார்வச் செயல்பாடுகள் உட்பட, நிலைபெறுதகு தன்மைக்கான கொமர்ஷல் வங்கியின் உறுதிப்பாட்டின் பல அம்சங்களை அங்கீகரிக்கிறது.
நிலைபெறுதகு தன்மை தொடர்பான வெளியீடுகள், வங்கியால் நடத்தப்படும் பசுமைக் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் மற்றும் நிலையான கட்டமைக்கப்பட்ட சூழல் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பசுமைக் கருத்துகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக வங்கி விருதுளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago