Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 ஜூலை 25 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி சிறுவர்களுக்கான அருணலு வெளிநாட்டு நாணய சேமிப்பைக் கணக்கை அறிமுகம் செய்துள்ளது. இலங்கைப் பிரஜைகளாக இலங்கையில் வசிக்கும் சிறுவர்களுக்கு அல்லது வெளிநாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இலங்கையர்களின் இலங்கையில் பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு நான்கு வகையான வெளிநாட்டு நாயணங்களில் இந்த கணக்குகளைத் திறக்கலாம் என வங்கி அறிவித்துள்ளது.
அருணலு வெளிநாட்டு நாணய சிறுவர் சேமிப்புக் கணக்கை பிள்ளைகளின் பெற்றோர்கள், தாத்தா அல்லது பாட்டி அல்லது சட்ட ரீதியான பாதுகாவலர்கள் எந்தவொரு கொமர்ஷல் வங்கிக் கிளையிலும் திறக்கலாம். 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு ஆரம்ப கட்டமாக 50 டொலர்களை வைப்புச் செய்து அல்லது அதற்கு சமமான ஸ்டேர்லிங் பவுண், யூரோ அல்லது அவுஸ்திரேலிய டொலர் போன்ற ஏனைய நாணயத்தை வைப்புச் செய்து இந்த கணக்கைத் திறக்கலாம். குறிப்பிட்ட பிள்ளையின் 18வது பிறந்த நாளின் பின்னரே இந்தக் கணக்கில் உள்ள மொத்தத் தொகையையும் மீளப் பெறலாம்.
தமது பிள்ளைகளின் வெளிநாட்டு கல்வி போன்ற எதிர்கால செலவுகளைக் கருத்திற் கொண்டு பெற்றோருக்கு வெளிநாட்டுப் பணத்திலேயே சேமிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த விஷேட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் நாணய மதிப்பிறக்க ஆபத்தில் இருந்து பாதுகாக்க பெரும் வகையில் இது உதவியாக அமைந்துள்ளது.
இந்தக் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படும் பணம் பெற்றோரிடம் அல்லது தாத்தா பாட்டி அல்லது சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கிடைத்த வரவாகப் பதிவு செய்யப்படும். இவர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் இருந்து இந்தக் கணக்கிற்கு நிதி மாற்றமாகவும் உரிய தொகையை வைப்பிடலாம்.
பிள்ளைகள் 18 வயதினை அடைந்ததும் இந்தப் பணத்தை வங்கி இலங்கை நாணயத்தில் வழங்கும். வெளிநாட்டுக் கல்வி, சுகாதாரத் தேவை போன்ற அவசியமான தேவைகளுக்காக ஏற்றுக் கொள்ளப்படும் காரணங்களின் அடிப்படையில் வெளிநாட்டு நாயணத்திலும் இது வழங்கப்படும். அதேபோல் விஷேட தேவைகளின் நிமித்தம் வங்கி அனுமதிக்கும் பட்சத்தில் முதிர்ச்சிக்கு முந்திய காலத்திலும் பணத்தை மீளப் பெறலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago