Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 07 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, இலங்கையின் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு, அவர்களின் அனைத்து வர்த்தக நிதியியல் தேவைகளையும் இலகுவில் நிறைவேற்றும் வகையில் ComBank TradeLink’ எனும் அதிநவீன டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ComBank TradeLink’ ஒரு தடையற்ற, நுண்ணிய வகையில் இயக்கப்படுகின்ற, பயனாளிகளுக்கு நட்புறவான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான டிஜிட்டல் தளமாகும் ஆகும். இது முழு வாடிக்கையாளர் பயணத்தையும் உள்ளடக்கிய இறுதி-முனை தீர்வுகளை வழங்கும் வகையில், வர்த்தக நிதியியல் பரிவர்த்தனைகளை எளிதாக்கி துரிதப்படுத்துவதுடன் மற்றும் இணக்கத்தை ஊக்குவிக்கிறது என்று வங்கி தெரிவித்துள்ளது.
ComBank TradeLink ஐ பயன்படுத்தும் இறக்குமதியாளர்கள், இறக்குமதி கடன் கடிதங்கள், இறக்குமதி சேகரிப்பு ஆவணங்கள், கப்பல் உத்தரவாதங்கள் மற்றும் முன்பண ஆவணங்கள், திறந்த கணக்கு கொடுப்பனவுகள், முற்பண கொடுப்பனவுகள் மற்றும் உத்தரவாதக் கடிதங்கள் போன்ற விடயங்களுக்கு 24x7 நிகழ்நேர டிஜிட்டல் அணுகலைப் பெறக்கூடியதாக இருக்கும்.
ஏற்றுமதியாளர்கள் இந்த நிகழ்நேர வளத்தின் மூலம் ஏற்றுமதி கடன் கடிதங்கள் மற்றும் ஏற்றுமதி சேகரிப்பு ஆவணங்கள் ஆகியவை தொடர்பாக அணுகக் கூடியதாக இருக்கும், இது அவர்களின் ஏற்றுமதி தொடர்பான பரிவர்த்தனைகளை விரைவுப்படுத்துவதுடன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்த தளமானது அனைத்து துறைகளிலிருந்தும், பல்வேறு அளவுகள் மற்றும் திறன்களைக் கொண்ட வர்த்தகர்களை ஆதரிப்பதுடன், மேலும் அவர்களுக்கு வங்கியுடன் மற்றொரு தொடர்பு பாதையை வழங்கும்.
'கொமர்ஷல் வங்கி, ஆரம்பத்திலிருந்தே, வர்த்தக நிதித் துறையில் முன்னணி ஸ்தானத்தில் இருந்து வருவதுடன், மேலும் வரலாற்று ரீதியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயற்பாடுகளில் நாட்டின் மிகப்பாரிய வசதிகளினை வழங்கும் தனியார் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது,' என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான சனத் மனதுங்க கூறினார். 'வர்த்தக நிதியியல் வசதிக்கான இந்த உறுதிப்பாட்டின் மரபு இந்த சமீபத்திய முயற்சியுடன் தொடர்கிறது, இது, இந்தத் துறையில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மாற்றங்களுடன் விரிவடைந்து பரிணமிக்கும் விரிவான நிகழ்நேர சேவைகளுடன் வர்த்தக நிதியை டிஜிட்டல் துறைக்கு எடுத்துச் செல்லும்.' என மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago