2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியிடமிருந்து ரூ.4 மில்லியன் பணப்பரிசில்கள்

Freelancer   / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகைகளை முன்னிட்டு மொத்தம் ரூ.4 மில்லியன் பண வெகுமதிகள் வழங்கப்பட உள்ளன.

கொமர்ஷல் வங்கி கொம்பேங்க் 'ரெமிட்பிளஸ் ரெமிட்டன்ஸ் அதிர்ஷ்டம் - பிற்றரட்ட வாசி'. 'என்ற தலைப்பிலான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பெப்ரவரி ஆரம்பித்து ஏப்ரல் 9 ஆம் திகதி வரை எட்டு வாரங்களுக்கு மேலாக, ‘RemitPlus’ பணப் பரிமாற்றச் சேவையின் ஊடாக அனுப்பப்படும் பணத்தினை பெறும் 160 பேரை தெரிவு செய்து, தலா 25,000 ரூபாய் ரொக்கப் பரிசுகளை வழங்கவுள்ளது.

வெற்றியாளர்களின் பெயர்கள் வங்கியின் உத்தியோகபூர்வ சமூக ஊடகபிரிவுகளிலும், RemitPlus செயலியிலும் இன்று (19) முதல் வெளியிடப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் ரெமிட்ப்ளஸ் என்பது ஒரு அதிநவீன, குறைந்த கட்டணத்துடன் கூடிய, நிகழ்நேர, இணையத்தள பணப்பரிவர்த்தனை வசதியாகும். இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாடுகளில் இருந்து உடனடி பணப் பரிமாற்றங்களைச் செய்ய உதவுகிறது. 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் முகவர்கள் மற்றும் வர்த்தகப்பங்காளர்களின் வலையமைப்பு மூலம் பணம் அனுப்புபவர்கள் இந்த   வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். கொம்பேங்க் ரெமிட்பிளஸ் ஊடாக பணம் பெறுபவர்களின் கொமர்ஷல் வங்கிக் கணக்குகளில் நாளின் எந்த நேரத்திலும், வருடத்தின் எந்த நாளிலும் உடனடியாக பணம் வரவு வைக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .