2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் வங்கிக்கு இரண்டு தங்கம்

Freelancer   / 2024 ஜூலை 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலைபேண்தகைமைக்கான வெற்றிக் கதைகளை அங்கீகரிப்பதற்காக கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) வழங்கிய பசுமைத் தொழில் விருதுகள் 2024 இல் கொமர்ஷல் வங்கி இரண்டு தங்கங்கள் உட்பட மூன்று விருதுகளை வென்றுள்ளது.

இலங்கையின் முதல் 100% காபன் நடுநிலை வங்கியான கொமர்ஷல் வங்கிக்கு குறைந்த காபன் மற்றும் அல்லது காலநிலை-மீள்திறன் உற்பத்திக்கான' தங்க விருது வங்கியின் காபன்-நடு நிலைக்கான பயணத்தின் நேர்மறையான தாக்கங்களுக்காக வழங்கப்பட்டதுடன் மற்றும் 'பசுமை டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான' தங்க விருது பரந்த அளவிலான வாடிக்கையாளர்களால் டிஜிட்டல் வங்கியை ஏற்றுக்கொள்வதில் வங்கியின் வெற்றிக்காக வழங்கப்பட்டது. இந்நடவடிக்கைகள் மூலம் வங்கியானது நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதுடன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கிறது.

கொமர்ஷல் வங்கியானது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முயற்சிகளில் பசுமை நிதியளிப்பில் அதன் முன்னோடி பங்கை அங்கீகரிக்கும் பொருட்டு 'உள்ளடக்கிய வர்த்தக அபிவிருத்திக்காக” வெண்கல விருதையும் வென்றது.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க கருத்துத் தெரிவிக்கையில், கொமர்ஷல் வங்கியானது, பன்முகத்தன்மை, உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக சமத்துவம் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய நிலைத்தன்மைக்கான முழுமையான அணுகுமுறைக்கு மாற்றியமைக்க முடியாத வகையில் தன்னை அர்ப்பணித்துள்ளது. 'இந்தத் துறையில் எங்களின் பன்முக முயற்சிகள் ஏற்கனவே பலனைத் தந்துள்ளன, வாழ்வாதாரத்தை உருவாக்கும் அதே வேளையில் நமது சுற்றுச்சூழலுக்கான வளமான, அர்த்தமுள்ள இருப்புக்கு நாம் பங்களிக்கிறோம் என்பதையே இது உணர்த்துகிறது. தொடரும் இந்த பயணத்தில் நாம் அடைந்து வரும் முடிவுகளுக்கு இந்த விருதுகள் ஒரு பொருத்தமான அங்கீகாரமாகும்'.

'குறைந்த காபன் மற்றும் காலநிலை-மீள்தன்மை உற்பத்திக்கான IDB யின் தங்க விருதானது கொமர்ஷல் வங்கியானது 85 கிளைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவியதன் மூலம் 2017 முதல் 2022 வரையான காலப்பகுதியில் மின் நுகர்வினை கருத்தில் கொள்ளும்போது மாதத்திற்கு 239,080 kWh மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், 16,404 Gigajoules மின்சாரம் குறைந்ததையும் அங்கீகரிக்கிறது.

'பசுமை டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான' தங்க விருது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கொமர்ஷல் வங்கியின் வெற்றியை அங்கீகரிக்கிறது. வங்கி 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முறையே 206% மற்றும் 80% வளர்ச்சியை அடைந்ததுடன் அந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இணையத்தள பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பசுமை நிதியியல் துறையில், கொமர்ஷல் வங்கியின் பசுமை கடன் வழங்கல் துறையானது 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் துறையில் 55% புத்தாக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிப்பது மற்றும் 16% காலநிலை ஸ்மார்ட் விவசாயத்திற்கான ஆதரவுடன் அதன் கடன் புத்தகத்தில் 2% க்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X