Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியானது அண்மையில் இலங்கையின் விவசாயத் துறையின் விருத்திக்கு பங்களிப்பினை வழங்கி வரும் பெயர் பெற்ற வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து வவுனியா பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும் ஸ்மார்ட் விவசாயத்தை ஊக்குவிப்பதற்குமாக 'விவசாய நவீனமயமாக்கல் கண்காட்சியை' நடத்தியிருந்தது.
ஹேலிஸ், அக்ஸ்டார், ஜோன் டீயர், டிமோ, சிஐசி மற்றும் பிரவுன்ஸ் ஆகிய தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள், விவசாய உற்பத்தி நிலையத்தின் ட்ரோன் பிரிவின் பிரதிநிதிகளுடன், நாள் முழுவதும் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றனர். இக்கண்காட்சியில் வவுனியா விவசாய பாடசாலை மாணவர்கள், கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் மற்றும் புதுக்குளம் மகாவித்தியாலய ஆசிரியர்கள், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் சாஸ்திரி கூலாங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைத் தணிக்கக் கூடிய தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கான களமாக விவசாய நவீனமயமாக்கல் கண்காட்சி திகழ்ந்ததாக வங்கி தெரிவித்துள்ளது. இந்நிகழ்வானது நவீன விவசாயத்தின் பொருளாதார அம்சங்களை மையமாகக் கொண்ட ஒரு விரிவுரை அமர்வையும் உள்ளடக்கி இருந்ததுடன் மேலும் வளங்களை மேம்படுத்துதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் நிலைபெறுதகு நடைமுறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் இலாபத்தை மேம்படுத்துதல் பற்றிய நடைமுறை நுண்ணறிவுகளையும் வழங்கியது.
நெல் விளைச்சலில் பயன்படுத்தப்படும் நவீன விவசாய நுட்பங்கள், உரம், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில் ட்ரோன்களைப் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளை கொண்டதாக இந்த அமர்வு அமைந்திருந்தது.
பருவநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கம், ஆளணி பற்றாக்குறை மற்றும் விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு போன்ற சவால்களை எதிர்கொள்வதில் விவசாயிகளுக்கு உதவக்கூடிய தீர்வுகளை இந்நிகழ்வானது எடுத்தியம்புவதாக இருந்தது. 'தேசியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் வங்கி என்ற வகையில், இந்தத் தடைகளை தகர்க்க விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்' என்று வங்கி தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
47 minute ago
56 minute ago