Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 04 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வர்த்தக திணைக்களத்தை 'கொம்பேங்க் டிஜிட்டல்' உடன் இணைத்து லங்கா பே சேவைகள் ஊடாக இணைய வழி கொடுப்பனவுகளுக்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.
இதன் விளைவாக வர்த்தகங்கள் அல்லது தனிநபர்கள் ஏற்றுமதியாளர்களுக்கான பதிவுக் கட்டணம், அசல் சான்றிதழ்களை வழங்குவதற்கான கட்டணம் என்பன உட்பட வர்த்தக திணைக்களத்தின் ஏனைய சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்கான கட்டணங்களை பாதுகாப்பான இணைய வழி கொடுப்பனவுகள் மூலம் செய்து கொள்ள முடியும்.
கடதாசி பாவனைகள் அற்ற இந்த செயற்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக் கிளையொன்றுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற தேவையும் இல்லை. மேலும் இது வங்கியின் நிலைத்தன்மை செயற்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்கின்றது. வாடிக்கையாளர்கள் சுற்றாடலுக்கு சிநேகபூர்வமானவர்களாக செயற்படவும் இது வழியமைக்கின்றது என வங்கி அறிவித்துள்ளது.
வங்கியின் டிஜிட்டல் வங்கிப் பிரிவின் துணை பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ஸ குறிப்பிடுகையில், 'கொம்பேங்க் டிஜிட்டல் மேடையில் வர்த்தக திணைக்களமும் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் எமது தர மேம்படுத்தல்கள் மற்றும் பண்புகளின் படிக்கட்டுகளில் நாம் ஒரு படி மேலே சென்றுள்ளோம். இவை எமது சில்லறை வாடிக்கையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், கூட்டாண்மை வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு இடையூரற்ற தனியார் மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவை அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன' என்றார். 'இந்த மேடையில் ஏற்கனவே பத்து லட்சத்துக்கும் அதிகமான பாவனையாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த தர மேம்படுத்தலானது உறுதியான பங்களிப்பை, வசதிகளில் மட்டுமன்றி நாம் வாழும் கிரகத்துக்கு சார்பான செயற்பாடுகளில் வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும்' என்று அவர் மேலும் கூறினார்.
கொமபேங்க் டிஜிட்டல் இணைய மேடை மூலம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் (IECD), உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD), சரக்கு, கப்பல் மற்றும் நுழைவுக் கட்ணங்களுக்காக இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA), இலங்கை சுங்கத் திணைக்களம், ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), இலங்கை முதலீட்டு சபை (BOI), இலங்கை தரப்படுத்தல் நிறுவனம் (SLSI) ஆகிய அரச திணைக்களங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. LankaPay இணைய வழி (LPPOP) மேடை மூலம் இந்தக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago