2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கொமர்ஷல் வங்கி இலங்கையின் தலைசிறந்த வங்கியாகத் தெரிவு

Freelancer   / 2024 ஜூலை 15 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்நாட்டு வங்கிகளில் மிகச் சிறந்த வங்கியாக மீண்டும் கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆசியாவின் நிதிச் சந்தை நிலவரம் பற்றிய உலகின் முன்னணி தகவல் மூலமாகக் திகழும் சஞ்சிகையான பினான்ஸ் ஏசியாவினால் இந்தத் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பினான்ஸ் ஏசியாவால் இந்த கீர்த்திமிக்க விருது கொமர்ஷல் வங்கிக்கு வழங்கப்படுகின்றமை இது 13வது தடவையாகும்.

அண்மையில் ஹொங்கொங்கின் றிட்ஸ் கார்ள்டன் ஹோட்டலில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்வில் கொமர்ஷல் வங்கிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. வங்கியின் பிரதான இடர் அதிகாரி கபில ஹெட்டிஹமு வங்கியின் சார்பாக இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

வங்கிக்கு கிடைத்த இந்த கீர்த்தி மிகு சர்வதேச விருது பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க 'இந்த விருது வங்கியின் மூலோபாய சுறுசுறுப்பை கோடிட்டுக் காட்டுகின்றது. நெகிழ்வுப் போக்குடன் கூடிய வெளிக் காரணிகளின் செல்வாக்குகள் இருந்த போதிலும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த வெளிப்பாடுகளை தருவதில் அதற்குள்ள ஆற்றல் என்பனவற்றுக்கும் இது சான்றாக அமைகின்றது. சாதகமான மற்றும் மோசமான நிலைமைகளிலும் கூட தொடர்ச்சியான எமது செழிப்பை பிரதிபலிப்பதாகவும் அது உள்ளது. எமது மூலோபாய தீர்க்கதரிசனத்தையும் செயல்நிலை ஒருமைப்பாட்டையும் அது கோடிட்டுக் காட்டுகின்றது. இந்த விருது எமது நீண்டகால தூர நோக்கிற்கும் உறுதியான அர்ப்பணம், எமது பங்குதாரர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை என்பனவற்றுக்கும் ஒரு சான்றாகும்' என்று கூறினார்.

இவ்வாண்டு பினான்ஸ் ஏசியா விருது வழங்கலில் கொமர்ஷல் வங்கியோடு இணைந்து விருதுகளை வென்ற வங்கிகளாக சீனா வங்கி (ஹொங்கொங்) சிடிபிஸி (தாய்வான்) பேங்க் மந்திரி (இந்தோனேஷியா) பப்ளிக் பேங்க் (மலேஷியா) டெக்கொம் பேங்க் (வியட்நாம்) எலயிட் பேங்க் (பாகிஸ்தான்) சிற்றி பேங்க் (பங்களாதேஷ்) என்பன காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X