Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 28 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
CA ஸ்ரீ லங்காவின் ‘TAGS’ விருதுகள் 2024 நிகழ்வில் கொமர்ஷல் வங்கி இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருதுகளை வென்றுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த அறிக்கையின் மூலம் நிதி அறிக்கையிடலில் வங்கியின் திறமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
விருதுகள் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு பிரதான தூண்களான வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைபெறுதகு தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் பொருட்டு கொமர்ஷல் வங்கிக்கு நிதிச் சேவைத் துறையில் 'கூட்டாண்மை ஆளுகை வெளிப்பாட்டுக்கான தங்க விருதும், தனியார் துறை வங்கிகளில் சிறந்த ஆண்டு அறிக்கைக்கான தங்க விருதும் வழங்கப்பட்டது. மேலும் வங்கியானது அனைத்து துறைகளிலும் 'டிஜிட்டல் முறை மாற்றத்திற்கான அறிக்கையிடலில்' வெள்ளியையும், அத்துடன் ஒட்டுமொத்தமாக கூட்டு அறிக்கையிடலில் சிறந்து விளங்குவதற்கான வெண்கல விருதையும் வென்றது.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க கூறுகையில், “CA Sri Lanka TAGS விருதுகளில் எங்களின் நிலையான அங்கீகாரம் அனைத்து பங்குதாரர்களுக்கும் உரித்தானதாகும். ஏனெனில், அதன் நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைபெறுதகு தன்மை ஆகியவற்றுக்கான வங்கியின் உறுதிப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.' என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 'ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய தரநிலைகள் மாறுவது மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் உயரும் போது, எங்கள் வர்த்தகமானது அதற்கேற்ப அளவிலும் சிக்கல்தன்மையிலும் அதிவேகமாக வளர்கிறது. இதற்கு எங்கள் ஆண்டு அறிக்கைகளில் நாங்கள் வழங்கும் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் மற்றும் சேர்த்தல்கள் தேவை. இந்த மதிப்புமிக்க விருதுகள், நிதி அறிக்கையிடலில் நாங்கள் எப்போதும் மிக உயர்ந்த உள்நாட்டு மற்றும் உலகளாவிய தரத்தை அடைவதை உறுதி செய்வதற்காக, எங்கள் வருடாந்த அறிக்கை குழுவின் தொழில்முறை மற்றும் ஆர்வத்திற்கு ஒரு பொருத்தமான சமிக்ஞையாகும்'.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago