Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரே நிகழ்வான ஆசிய வங்கி மற்றும் நிதி (Asian Banking and Finance - ABF) வருடாந்த விருதுகள் 2024 விழாவில் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆறு விருதுகளை கொமர்ஷல் வங்கி வென்றது.
கொமர்ஷல் வங்கி மூன்று பிரிவுகளிலும் ஒவ்வொன்றிலும் இரு விருதுகள் என்ற ரீதியில் வென்றுள்ளது. ABF சில்லறை வங்கியியல் விருதுகள், ABF பெருநிறுவன மற்றும் முதலீட்டு விருதுகள், மேலும் ABF Fintech விருதுகள், ஆகிய மூன்று பிரிவுகளிலும் வங்கியானது 6 விருதுகளை இவ்வாறு வென்றுள்ளமை வங்கியியல் மற்றும் நிதித்துறையின் பல்வேறு பிரிவுகளில் அதன் பல்துறைத்திறனை வெளிப்படுத்துகிறது.
சில்லறை வங்கியியல் விருதுகள் பிரிவில் 'ஆண்டின் டிஜிட்டல் நுகர்வோர் வங்கியியல் திட்ட முயற்சி' மற்றும் 'ஆண்டின் SME வங்கி' ஆகிய விருதுகளை வங்கி பெற்றது பெருநிறுவன மற்றும் முதலீட்டு விருதுகள் பிரிவில் 'ஆண்டின் பெருநிறுவன வாடிக்கையாளர் திட்ட முயற்சி' மற்றும் 'ஆண்டின் கடன் ஒப்பந்தம' ஆகிய விருதுகளை பெற்றது. மேலும் Fintech விருதுகள் பிரிவில் சுற்றுச்சூழல் முறைமை ஒத்துழைப்பு விருது மற்றும் கொடுப்பனவு தீர்வு விருது ஆகிய விருதுகளை வென்றது.
ABF இன் இந்த ஆண்டின் சிறந்த டிஜிட்டல் நுகர்வோர் வங்கியியல் திட்ட முயற்சிக்கான விருதை கொமர்ஷல் வங்கியின் முதன்மை டிஜிட்டல் தயாரிப்பும் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் வங்கித் தளமுமான ComBank Digital வென்றது.
ஆண்டின் SME வங்கி விருது இலங்கையில் SME துறைக்கு மிகப் பெரிய கடன் வழங்குபவராக கொமர்ஷல் வங்கியின் அந்தஸ்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன் தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களின் வர்த்தகத்தை வளர்ப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் அணுகலுடன் செயற்படுவதற்கு அவர்களை மேம்படுத்துவதற்கு வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட எண்ணற்ற முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதுடன் அவர்கள் டிஜிட்டல் தளங்களுக்கு மாறுவதற்கும் சர்வதேச சந்தைகளை அடைவதற்கும் வசதி வாய்ப்பினை அளிப்பதையும் வெளிப்படுத்துகிறது.
அந்நிய செலாவணி விகிதக் கோரிக்கைகளை நவீனமயமாக்குதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட முன்னோடி திட்ட முயற்சியான ‘Treasury FX Portal’ - என்பதற்காக கொமர்ஷல் வங்கி இந்த ஆண்டின் பெருநிறுவன வாடிக்கையாளர் திட்ட முயற்சி விருதை வென்றது.
இதே வேளை, 2023 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட கடன் சாதனங்களுக்காக டிசம்பர் 2023 பொதுச் சந்தைகள் மூலம் திரட்டப்பட்ட மிகப் பெரிய தொகையான வங்கியின் ரூ.12 பில்லியன் Basel III கடனீட்டுப் பத்திர வெளியீட்டிற்காக இந்த ஆண்டின் கடன் ஒப்பந்தம் விருது வழங்கப்பட்டது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக (SME கள்) வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் வர்த்தக சுற்றுச்சூழல் முறைமையான கொமர்ஷல் வங்கியின் LEAP உலகளாவிய இணைப்பாளருக்காக (LEAP Global Linker) சுற்றுச்சூழல்முறைமை ஒத்துழைப்பு விருதை வென்றது.
கொமர்ஷல் வங்கியின் புதுமையான, செலவு குறைந்த மற்றும் நிகழ்நேர இணையத்தள பணப்பரிவர்த்தனை சேவையான ரெமிட் பிளஸுக்கு கொடுப்பனவு தீர்வு விருது வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago