Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 24 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் கொமர்ஷல் வங்கியின் கடன் புத்தகப் பெறுமதி ரூ. 1.316 ட்ரில்லியன்களாகும். இலங்கை ரூபாயின் பெறுமதி பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அந்த காலப்பகுதியில் கடன் வழங்குவதில் கொமர்ஷல் வங்கி காட்டி வந்த தொடர் கவனம் கடன் புத்தகத்தில் இந்த நிலையை ஏற்படுத்தி ஐந்தொகையில் சுருக்க நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குழுமம் அதன் கடன் புத்தகத்தில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் ரூ. 20 பில்லியன் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 2024 மார்ச் 31ல் முடிவடைந்த ஆண்டில் இந்த தொகை ரூ. 129 பில்லியன்களாக இருந்தது. இதன் மாதாந்த சராசரி ரூ. 10.75 பில்லியன்களாகும். மொத்தக் கடன் மற்றும் முற்பணங்களில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 10.87 வீதமாகும்.
இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கி வலையமைப்பு அதன் கிளைகள் மற்றும் இணை நிறுவனங்களை உள்ளடக்கிய கொமர்ஷல் வங்கி குழுமம் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. வைப்புக்களின் பெறுமதி மிகக் குறைந்த அளவில் 0.33 வீதமாகி ரூ. 2.141 ட்ரில்லியன்களாக 2024 முதல் காலாண்டில் உள்ளது. இதற்கு பிரதான காரணம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நிலையாகும்.
மொத்த சொத்துக்களின் பெறுமதி 31 மார்ச் 2024ல், ரூ. 2.616 ட்ரில்லியன்களாக பதிவாகியிருந்தது. இது 1.48 வீதம் குறைவடைந்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் நிலையைக் கருத்தில் கொணடு சொத்துக்களின் பெறுமதி வெளிநாட்டு நாணயத்தில் மீள் மதிப்பீடு செய்யப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குழுமம் மீளாய்வுக்கு உட்பட்ட இந்த காலாண்டில் ரூ. 80.209 பில்லியன்களை மொத்த வருமானமாகப் பதிவு செய்துள்ளது. அத்தோடு இந்த மூன்று மாத காலத்தில் தேறிய வட்டி வருமானம் 45.97 வீதத்தால் அதிகரித்து ரூ. 27.698 பில்லியன்களாக உள்ளது.
'ரூபாயின் உறுதிப்பாடு, நாட்டின் நுண் பொருளாதார இயக்கவியலின் தேவைகளால் குறைபாடுகளுக்கான ஒதுக்கீடுகள், என்பன போன்றனவே இதற்கான காரணிகள். இவை வழமையான தேவைக்கு அதிகமான விதத்தில் பிரதான குறிகாட்டிகள் மீது தொடர் தாக்குதலை செலுத்தியுள்ளன' என்று வங்கியின் தலைவர் சர்ஹான் முஹ்ஸின் கூறினார். 'எமது முதலாவது காலாண்டு புள்ளி விவரங்கள் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகள் மீது, சகல பங்குதாரர்களுக்கும் பங்கு ரீதியான விளைவுகளை தோற்றுவிக்கும் வகையில் எமது கவனத்தை தொடர்ந்து வைத்திருக்கும் ஆற்றலை பறைசாற்றி நிற்கின்றது' என்று அவர் மேலும் கூறினார்.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க இது பற்றிக் குறிப்பிடுகையில் 'எமது முதலாவது காலாண்டின் செயற்பாடுகள் வங்கியின் பிரிவுகளை நிதி அடிப்படையிலான செயற்பாடுகளின் பங்களிப்பை விருத்தி செய்யும் வகையில் அமுல் செய்யப்பட்ட மூலோபாயங்களின் பெறுபேறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. இது எமது அடிமட்டத்தில் பெறுமதி மிக்க முன்னேற்றத்தை பதிவு செய்ய உதவியுள்ளது. இதன் விளைவாக பிரதான செயற்பாட்டு குறிகாட்டிகள் மற்றும் செயற்பாட்டு விகிதாசாரங்கள் என்பன தொடர்ந்தும் தாக்கம் மிக்கவையாக உள்ளன. இது உள்நாட்டில் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட உள்நாட்டு வங்கி என்ற எமது பங்களிப்பை தொடர்ந்து கட்டிக்காக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
5 hours ago