Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் உள்ள விவசாயிகளின் பாரம்பரிய அரிசி உற்பத்திக்குத் தேவையான நிதி உதவி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உபகரணங்கள் என்பனவற்றை கொமர்ஷல் வங்கி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வங்கியின் திரிஷக்தி பெறுமானத் தொடர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அண்மையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டிருந்ததாக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், கொக்கடிச்சோலையில் உள்ள மகளிர் அமைப்புக்களோடு இணைந்து சிறிய அளவிலான விவசாயிகள் மத்தியில் நிதி உட்;பட்ட ஏனைய விடயங்களில் உதவும் இந்த நடவடிக்கையை கொமர்ஷல் வங்கி எடுத்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உற்பத்திக் கொள்ளளவை அதிகரித்து கிராம மட்ட வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் ஒரு கட்டமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் மத்தியில் நெல்லை கொதிக்கவைக்கும் 30 கருவிகளை வங்கி பகிர்ந்தளித்துள்ளது. நெல்லை சேகரித்தல், பாரம்பரிய முறையில் அரிசி தயாரித்தல், அவற்றை உள்ளுர் சந்தைக்கு மற்றும் மட்டக்களப்பில் உள்ள தனிநபர்களுக்கு வழங்கல் போன்ற தொழில் பிரிவுகளைச் சார்ந்ததாகவே இவர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளிர் அமைப்புக்களுக்கு சமையல் உபகரணங்களைக் கையளித்த பின் கொமர்ஷல் வங்கியின் அதிகாரிகள் வங்கியின் செயற்பாடுகள், சேவைகள் மற்றும் உற்பத்திகள் பற்றி மேற்படி சமூகத்தவர்களுக்கு விரிவான விளக்கங்களை அளித்தனர்.
இந்த வைபவத்தில் உரையாற்றிய மகளிர் அமைப்பின் தலைவி திருமதி. பி.சகுந்தலாதேவி 'வங்கியின் இந்த நடமாடும் சேவை ஊடாக கணக்குகளை திறத்தல், பண வைப்பீடு, மீளப் பெறல், நுண் கடன், விவசாயக் குத்தகை மற்றும் ஏனைய வங்கிச் சேவைகள் என விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படை வங்கி வசதிகளும் சேவைகளும் குறைந்த பட்சம் மாதத்தின் சில தினங்களுக்காவது வழங்கப்பட்டுள்ளன. இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள கிடைத்தமைக்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம். எமது வர்த்தகத்தை விரிவு படுத்தவும், உற்பத்தியை மேம்படுத்தவும்.எமது வாழ்வு முறை முன்னேற்றத்துக்கும் கூட இந்தச் சேவைகள் பெரும் உதவியாக உள்ளன. எமது கழகத்தில் உள்ள 80 உறுப்பினர்களுள் 45 பேருக்கு கொமர்ஷல் வங்கி மட்டக்களப்பு கிளையில் இருந்து திரிஷக்தி கடன்கள் கிடைத்துள்ளன. இந்த மூலதன உள்ளீர்ப்பானது இந்தக் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதோடு மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகின்றது. மொத்தத்தில் அது எமது சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி உள்ளது' என்றார்
கொக்கட்டிச்சோலையில் உள்ள மகளிர் கழகம் விரைவில் 'படையாண்டவெளி மகளிர் கழகம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படவுள்ளது. இது 2019ல் கொமர்ஷல் வங்கியின் நடமாடும் சேவையின் உதவியோடு ஸ்தாபிக்கப்பட்டது. பயிர்ச்செய்கை, பாரம்பரிய முறையில் அரிசி தயாரித்தல், கால்நடை வளர்ப்பு என்பனவற்றில் ஈடுபடும் 12 விவசாய உறுப்பினர்களைக் கொண்ட சிறிய ஒரு கழகமாகத் தான் இது உருவாக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .