Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 12 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கென்ரிச் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு வேலைத்திட்டம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் பொறுப்பற்ற வாகன நிறுத்தம் நீண்டகாலமாக பெரும் பிரச்சினையாக காணப்படுவதனால், கென்ரிச் ஃபைனான்ஸ் வெள்ளவத்தை பொலிஸாருக்கு உதவுவதற்கு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி முக்கியமான இடங்களில் வீதி பாதுகாப்பு அடையாள பலகைகளை காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் சாரதிகள் இருபாலரும் வீதியை பாதுகாப்பாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும். இந்த முயற்சியானது வெள்ளவத்தை பகுதியில் வீதி பாதுகாப்பு மற்றும் பொறுப்பான வாகன தரிப்பிட நடைமுறைகளை ஊக்குவிக்கும்.
கென்ரிச் ஃபினான்ஸ் நிறுவனம் அண்மையில், வெள்ளவத்தை பொலிஸாருக்கு “சாலை பாதுகாப்பு அடையாள பலகைகளை” வழங்கியது. இந்த பலகைகள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி W. V. T. மதுஷங்கவிடம் உதவிப் பொது முகாமையாளர்- கூட்டாண்மை தொடர்பாடல்கள். முகாமையாளர் சமந்த W. குணவர்தனவினால் கையளிக்கப்பட்டது. மங்கள சுசந்த -உதவி பொது முகாமையாளர் – கூட்டாண்மை தொடர்பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இது பிரதேசத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேவையாக இருந்ததால், கென்ரிச் ஃபினான்ஸின் இந்த நடவடிக்கை வெள்ளவத்தை பொலிஸாரால் வெகுவாக பாராட்டப்பட்டது. கென்ரிச் ஃபினான்ஸின் சமூக ஈடுபாடு மற்றும் சாலைப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு ஒரு பொறுப்பான நிதி நிறுவனமாக அதன் மதிப்புகளின் பிரதிபலிப்பாகும். நிறுவனம் அதன் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago