2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கி வீட்டுக் கடன் சந்தையில் முன்னிலை

Freelancer   / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் சொந்த வீடு ஒன்றை நிர்மாணிக்க விரும்புபவர்களின் கனவுகளுக்கு மிகப் பெரிய ஆதரவாளராக உருவெடுத்த நிலையில், 'வீட்டுக் கடன்கள்' துறையில் சந்தைத் தலைமையை அடைகிறது.

மார்ச் 31, 2024இல், அதன் வீட்டுக் கடன்கள் துறையானது ரூ.72.965 பில்லியனாக வளர்ச்சியடைந்து, முதலாம் இடத்தைப் பிடித்திருந்ததாக வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி இலங்கையில் வீட்டுக் கடன்களுக்கான சந்தையில் முன்னணியில் இருக்கும் முதலாவது தனியார் துறை வங்கியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அண்மைய மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் – சில்லறை வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் ஹஸ்ரத் முனசிங்க, 'வங்கியில் வலுவான பிணைப்புகளில் ஒன்று வீடு கட்டுபவர்களுக்கும் அவர்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கும் வங்கிகளுக்கும் இடையிலான பிணைப்பாகும். இது எங்களுக்கு ஒரு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாகும் என்பதுடன் மேலும் சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியிலும் பல கடன் தெரிவுகளை வங்கி உருவாக்கியுள்ளதன் மூலம் அதன் வீட்டுக் கடன் துறையில்  நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன்கள்; நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வீடு கட்டுதல், பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை நிறைவு செய்தல், ஏற்கனவே உள்ள வீட்டைப் புதுப்பித்தல் அல்லது பெருப்பித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வீடு தொடர்பான கடனைத் தீர்த்துக்கொள்ளல் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகின்றன. வங்கியானது அதன் பொதுவான வீட்டுக் கடன்களைத் தவிர, முதல் முறையாக வீட்டினை கொள்வனவு செய்பவர்கள் மற்றும் கட்டிடம் கட்டுபவர்களுக்கும், பசுமை வீட்டுக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு நாணய வீட்டுக் கடன்களுக்கும் தனியான கடன் திட்டத்தைக் கொண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வங்கியானது தொழில் வல்லுநர்கள் மற்றும் உயர் நிகர மதிப்புள்ள நபர்களுக்கு ஐந்தாண்டு கால அவகாசத்தை வழங்குகிறது, அங்கு அவர்கள் சலுகைக் காலத்தில் வட்டியை மட்டுமே செலுத்த முடியும், அதன்பின்னர், சமமான மாதாந்த தவணை, இருப்பு முறையைக் குறைத்தல் அல்லது  வீட்டுக் கடன்களை ஒரு படி உயர்த்துதல் போன்ற ஏதேனும் ஒரு கிடைக்கக்கூடிய திருப்பிச் செலுத்தும் முறையின் கீழ், வட்டியுடன் சேர்த்து மூலதனத்தைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .