Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 03 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்ரிச் ஃபினான்ஸ் லிமிடெட் (KFL) தனியார் இடவமைவினூடாக 2 பில்லியன் ரூபாயை மூலதமாகத் திரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2020 டிசெம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள பிரதான மூலதன தேவைப்பாடு எனும் கடப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக இந்தத் தனியார் இடவமைவை மேற்கொள்ளவுள்ளது. நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் இந்த மூலதனப் பெறுமதி தொடர்பில், இலங்கை மத்திய வங்கியால் காலாகாலமாக தீர்மானிக்கப்படுவதுடன், 2021 ஜனவரி 1ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகக்குறைந்தது 2 பில்லியன் ரூபாயை மூலதனமாகப் பேண வேண்டும் என நிர்ணயித்துள்ளது.
கன்ரிச் ஃபினான்ஸ் லிமிடெட்டுக்கு சாதாரண வாக்குரிமைப் பங்குகள், மீட்கப்பட முடியாதவை, திரளாத முன்னுரிமைப் பங்குகள் ஆகியவற்றை விநியோகிப்பதற்கான அனுமதியை கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி வழங்கியிருந்தது. தனியார் இடவமைவினூடாக 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான சாதாரண பங்குகளையும் மேலும் 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான முன்னுரிமைப் பங்குகளையும் விநியோகிக்க திட்டமிட்டுள்ளதுடன், இவற்றினூடாக மொத்தமாக மூலதனப் பெறுமதி 3 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கன்ரிச் ஃபினான்ஸ், 2010 ஆம் ஆண்டு மீள அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஆறு வருட கால காலப்பகுதியினுள் நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் இருப்பை 600 மில்லியன் ரூபாயிலிருந்து 12 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ள முடிந்தது. ஒரு பகுதியில் மாத்திரம் அமைந்திருந்த நிறுவனத்தை 36 கிளைகள் வரை விஸ்தரித்திருந்ததுடன், 1000 ஊழியர்கள் வரை பணிக்கமர்த்தியுள்ளது.
2014/2015/2016 நிதியாண்டுகளுக்கான Global Banking & Finance Review விருதுகள் வழங்கும் நிகழ்வுகளின் போது, தொடர்ச்சியாக 'வேகமாக வளர்ந்து வரும், உயர்ந்து வரும் நிதி நிறுவனம்', 'இலங்கையின் சிறந்த நுண்நிதிச் சேவைகள் வழங்குநர்' ஆகிய விருதுகளை வென்றிருந்தது. நிறுவனம் தன்வசம் பன்முகப்படுத்தப்பட்ட சேவை வழங்கல்களைக் கொண்டுள்ளதுடன், இதில் லிசிங், மைக்குரோ லீசிங், நுண் நிதியியல், அடகுச் சேவை மற்றும் நுகர்வோர் கடன்கள் போன்றன அடங்குகின்றன. அடகுச் சேவையினூடாக நிதி வழங்கல் தொடர்பில் தற்போது நிறுவனம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், பங்கு வழங்கல் பூர்த்தியடைந்ததும், மீண்டும் பன்முகப்படுத்தி தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தும்.
50 வருட பூர்த்தியில் காலடி பதிக்கவுள்ள நிறுவனம், வருட நிறைவுக்கு முன்னர் பங்கு வழங்கலை பூர்த்தி செய்யும் என்பதுடன், தற்போதை பொருளாதாரச் சூழலும், வருட நிறைவில் முன்னேற்றம் காணும் என்பதுடன், நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதைக்கும் வழிகோலுவதாக அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 minute ago
23 minute ago
33 minute ago