2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கடதாசி விலை அதிகரிப்பால் உள்ளூர் கொள்கலன் தொழிற்துறை பாதிப்பு

S.Sekar   / 2021 மார்ச் 19 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சந்தையில் சகல வகையான கடதாசிகளின் விலைகளும் பெருமளவு அதிகரித்துச் செல்கின்றமையால், இலங்கையின் அலைநெளிவுள்ள கொள்கலன் உற்பத்தித் தொழிற்துறை அதிக நெருக்கடிக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளது என லங்கா அலைநெளிவுள்ள கொள்கலன் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சர்வதேச சந்தையில் சகல விதமான கடதாசிகளின் விலைகளும் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டைச் சேர்ந்த பல அலைநெளிவுள்ள மற்றும் கடதாசிப் பெட்டி உற்பத்தியாளர்கள் வரலாற்றில் இதுவரை எதிர்நோக்கியிராத நெருக்கடி நிறைந்த சூழலுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், விலை அதிகரிப்பு தொடர்ந்தும் அதிகரித்து செல்வதுடன், விரைவில் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான எவ்விதமான தோற்றப்பாடுகளையும் அவதானிக்க முடியாமலுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு மூலங்களின் எதிர்வுகூறல்களின் பிரகாரம், அடுத்து வரும் வாரங்களிலும், Brown kraftliner மற்றும் testliner அடங்கலான brown மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட தரங்கள் மற்றும் அலைநெளிவுள்ள மத்தியளவு கடதாசிகளின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என்பது மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில், உறுதியான விலை இன்மை காரணமாக இலங்கையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக விலைகள் அதிகரித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பிரதான பங்காளர்களின் போதியளவு உதவி மற்றும் ஈடுபாடு கிடைக்காவிடின் இந்நிலை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொற்றுப் பரவலுடனான சூழ்நிலையில் கடதாசிக்கு பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை மற்றும் சரக்கேற்றல் கட்டணங்கள் பெருமளவு அதிகரித்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டின் முற்பகுதியிலிருந்து சீனாவில் சகல விதமான மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய கழிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், உள்நாட்டின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அதிகளவு கேள்வி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவின் கடதாசி ஆலைகள் கடதாசி தயாரிப்புக்காக இவ்வளவு காலமும் பயன்படுத்திய மீள்சுழற்சிக்குட்படுத்திய brown pulp மற்றும்  unbleached Kraft linerboard ஆகியவற்றுக்கு பதிலாக pulp அல்லது fiber மூலத்தை பயன்படுத்தி கடதாசியை தயாரிக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கொள்கலன்கள் ஏனைய நாடுகளின் தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில், உயர் தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. இலங்கையில் இந்த கொள்கலன்கள் உற்பத்திக்கான கடதாசிகளை ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்கின்றது. எவ்வாறாயினும், இரண்டாம் அலை தொற்றுப் பரவல் காரணமாக, இந்த நாடுகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், கழிவு கடதாசி சேகரிப்பு என்பதும் பாதிக்கப்பட்டுள்ள, இதனால் விலைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக சரக்கு கையாளலில் தட்டுபாடும் நிலவுகின்றது.

தொற்றுப் பரவலின் தாக்கத்திலிருந்து பொருளாதாரம் மீட்சியை எய்த எதிர்பார்க்கும் நிலையில், இந்த விலை அதிகரிப்புடனான சூழ்நிலை மேலும் கவலைகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளதுடன், அலைநெளிவுள்ள கொள்கலனுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்படும் சூழ்நிலையில், இலத்திரனியல் பொருட்கள் முதல் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் வரை பல்வேறு துறைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .