Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொவிட்-19 முடக்கநிலை அமுலிலிருந்த காலப்பகுதியில் 2020 மே மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி ஒன்றை “வர்ணமயமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்தது. தமது வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் போது, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வர்ணமயமான விடயங்களை ஆக்கபூர்வமான வகையில் வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த போட்டி அமைந்திருந்தது.
இந்தப் போட்டிக்காக பெருமளவு சிறுவர்களின் ஆக்கங்கள் கிடைத்திருந்ததுடன், நூற்றுக் கணக்கான சிறுவர்கள் தமது கலை உணர்வுகளை வெளிப்படுத்தி, தமது புதிய வாழ்க்கை வழமையை உணர்த்தி இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர். பல சுற்று மதிப்பீடுகளின் பின்னர், 30 ஆக்கங்கள் பின்வரும் வயதுக் குழுக்களில் தெரிவு செய்யப்பட்டிருந்தன. 0 முதல் 6 வயது, 7 முதல் 11 வயது மற்றும் 12 முதல் 15 வயது. இந்த வயதுப்பிரிவுகளில் வெற்றியீட்டியோருக்கு ஓவியங்கள் தீட்டுவதற்கான உபகரணங்கள் விநியோகிக்கப்படும் என்பதுடன், தெரிவு செய்யப்பட்ட 30 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
'வர்ணமயமான வாழ்க்கை' போட்டியின் வெற்றியாளர்களாக, எம்.எஸ்.எம். அம்ஹா (0-6 வயது), ஆர். அக்ஷதா பத்மசினி (7-11 வயது), சமுதி ஹெந்தஹேவா (12-15 வயது) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் இணையத்தளத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் ஆக்கங்கள் மற்றும் அவற்றின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. https://www.facebook.com/EUDel.Srilanka.Maldives எனும் பக்கத்தில் அவற்றை பார்வையிட முடியும்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் இடைக்கால தலைமை அதிகாரி பிராங்க் ஹெஸ் இந்தப் போட்டி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்களின் ஆர்வத்துடனான பங்கேற்பு என்பது உண்மையில் வரவேற்கத்தக்கது, குறிப்பாக அவர்கள் வாழும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பெற்றுக் கொள்ளும் உலக அனுபவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு இந்த ஆக்கங்களை வடிவமைத்துள்ளனர். அவர்களின் சிந்தனை வெளிப்பாடுகளை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வெளிக்கொணர வாய்ப்பை ஏற்படுத்த முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், தெரிவு செய்யப்பட்ட அவரின் ஆக்கங்களும் பாராட்டுதலுக்குரியவை" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
55 minute ago
25 Apr 2025