Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 ஏப்ரல் 28 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
Saegis Campus, தனது நீண்ட கால பங்காண்மை கல்வியகமான ஐக்கிய இராஜ்ஜியத்தின் Canterbury Christ Church University (CCCU) இரு சிரேஷ்ட பிரதிநிதிகளை அண்மையில் வரவேற்றிருந்தது. அதனூடாக, இரு கல்வி நிலையங்களுக்குமிடையிலான பங்காண்மை மேலும் வலிமைப்படுத்தப்பட்டிருந்தது.
CCCU இன் பங்காண்மைகளுக்கான பணிப்பாளர் கலாநிதி. லோர்னா தோமஸ் மற்றும் பங்காண்மைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் கலாநிதி. கேட்டி வார்டன் ஆகியோர் Saegis Campus க்கு விஜயம் செய்திருந்த போது, Master of Business Administration மற்றும் BSc (Hons) Business Management பட்டப்படிப்புகளின் 10ஆவது தொகுதி கற்கைகள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் Canterbury Christ Church University இனால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் பட்டப்பின்படிப்புகளினூடாக சகல மாணவர்களுக்கும் சிறந்த பயிலல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன், இந்த பங்காண்மையை விரிவாக்கம் செய்வதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் Saegis Campus இன் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.
Saegis Campus ஐச் சேர்ந்த மாணவர்களுக்கு சகல வசதிகளும் படைத்த கல்வி பயிலும் சூழல் எப்போதும் உறுதி செய்யப்படுவதுடன், அவற்றில் இலவச Wi-Fi, நவீன வசதிகள் படைத்த IT ஆய்வுகூடம், மொழிகள் ஆய்வுகூடம், நூலகம், ஓய்வுப் பகுதி, அதிகளவு இடவசதி கொண்ட வாயு குளிரூட்டப்பட்ட விரிவுரை அறைகள், உணவகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகள் போன்றன அடங்குகின்றன. தொழில்நிலை வழிகாட்டல் மற்றும் ஆளுமை கட்டியெழுப்பல் செயற்பாடுகள், இலவச ஆங்கில மொழி வகுப்புகள், Leo Club மற்றும் Rotaract Club மற்றும் மேலதிக கல்விசார் உதவிகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட BBM (Hons) Tourism & Hospitality Management கற்கையை ஆரம்பிப்பதற்கு Saegis Campus க்கு கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது. முகாமைத்துவம், மனிதநேயங்கள் மற்றும் சமூக விஞ்ஞான மற்றும் பட்டப் பின்படிப்பு பீடத்தினால் இந்தக் கற்கை வழங்கப்படும். Saegis Campus இனால் கல்வி அமைச்சின் அனுமதியுடன், தற்போது 11 பட்டப்படிப்புகள் முகாமைத்துவம், கணனி மற்றும் ஆங்கிலம் போன்ற பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இதில் BBM (Hons) in Logistics and Supply Chain Management கற்கையும் அடங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் சுற்றுலாத் துறை மீண்டெழ ஆரம்பித்துள்ள நிலையில், இந்த நான்காண்டு கற்கைநெறியினூடாக, மாணவர்களுக்கு இந்தத் துறையில் காணப்படும் பல்வேறு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு தயார்ப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதில், உத்தரவாதமளிக்கப்பட்ட தொழிற்பயிற்சி வாய்ப்புகள் அடங்கியிருப்பதுடன், இது 100 சதவீதம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
Saegis Campus இல் மாணவர்களுக்கு தமது தெரிவுக்குரிய பட்டப் படிப்பைத் தொடர்வதற்கு வட்டியில்லாத மாதாந்த தவணை முறைக் கொடுப்பனவுத் திட்டத்தை தெரிவு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்புக்காக 75 சதவீதம் வரையான விசேட புலமைப்பரிசிலும் வழங்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
54 minute ago
3 hours ago