Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 21 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏழு உயர் திறன் படைத்த நிறுவனங்களைக் கொண்ட முதல் சுற்றினை அவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக அதிநவீன வணிக ஆலோசனைச் சேவைகளை வழங்குவதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நிதியுதவி, SL@100 தேர்ந்தெடுத்துள்ளது. நடுத்தர அளவிலான நிறுவனத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட தனியார் துறை தலைமையிலான தளமான SL@100 ஆனது, ஏழு நிறுவனங்களைச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், இலாபத்தை அதிகரிப்பதற்கும், சந்தைகளை விரிவுபடுத்துவதற்குமான திறன்களைக் கொண்டதாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
"இந்த ஏழு நிறுவனங்களும் அவர்களது விரைவான வளர்ச்சிக்கான பயணத்தில் அமெரிக்க ஆதரவைப் பெறும் பல நிறுவனங்களில் முதலாவதாகும்" என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மை (USAID) செயற்பணிகள் பணிப்பாளராகிய ரீட் ஈஷ்லிமன் கூறினார். "இலங்கையின் நடுத்தர சந்தை நிறுவனங்கள் செழிக்கத் தேவையான வணிக சேவைகளை அணுகுவதற்கு உதவுவதன் மூலம், SL@100 இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு மாற்றத்தைத் தூண்டுகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டெக்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளரும், SL@100 இணை நிறுவுனருமான கலாநிதி குமுது குணசேகர மேலும் குறிப்பிடுகையில், “இலங்கையின் வளர்ச்சி சிறிய நடுத்தர முயற்சியாண்மைகளிலும் பொறுத்தது அவர்களின் வளர்ச்சிப் பாதையை விரைவுபடுத்தும் திறனிலும் பெரிதும் தங்கியுள்ளது. விண்ணப்பித்த நிறுவனங்களின் தரம் மற்றும் கரைகடந்து வளர்ச்சியடைய வேண்டும் என்பதிலுள்ள அவர்களின் ஆர்வம் ஆகியன என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதுடன் ஊக்குவிக்கின்றன. ”
செப்டம்பர் 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட SL@100 சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகளுக்குள் அதிக வருமானம் பெறும் நாடாக இலங்கையின் பயணத்தை ஆதரிக்கும் வகையில் சமமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சந்தைப்படுத்தல், செயல்பாடுகள், நிதி முகாமைத்துவம், ஏற்றுமதி மற்றும் மூலதனத்திற்கான அணுகல் போன்ற பகுதிகளில் நடுத்தர சந்தை நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துவதற்கு இந்த முன்னெடுப்பானது ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக குழுக்கள் மற்றும் வணிக அபிவிருத்திச் சேவை வழங்குநர்களை ஒன்றிணைக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago