Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள இளம் சமுதாயத்தினர் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) 4G வலையமைப்பு வசதிகள் கொண்ட ஒலி அலைக்கற்றை எல்லையை வெற்றிகரமாக தன்வசப்படுத்தியுள்ளதுடன் அதன்படி எயார்டெல் நிறுவனம் எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் 4பு தொழில்நுட்பத்தைக் கொண்ட கவரேஜ் உடன் சேவையை வழங்கும்.
சிறந்த அலைவரிசையுடன் கூடிய 850ஆர்ண ஒலி அலைக்கற்றை எல்லைக்குள் எயார்டெல் 4G சேவை செயற்படவுள்ளது. விரிவான வலைப்பின்னலை உள்ளடக்கிய மிகவும் சிறந்த நாடு முழுவதும் உள்ளடக்கிய சிறந்த 4 G வலைப்பின்னல் அனுபவமாக இந்த பரிமாற்றம் அமையும்.
அதன்படி, எயார்டெல் உலகளாவிய முதலீட்டு குழுமத்தினால் தமது பாவனையாளர்களுக்கு எயார்டெல் 4 G வலைப்பின்னல் ஊடாக பொழுதுபோக்கு மற்றும் சுகாதார பாதுகாப்பை நோக்காகக் கொண்ட விரிவான எல்லையை புத்தாக்க செயலி (App) வரிசை மூலம் சிறந்த டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, “எமக்கு 4G வலைப்பின்னல் கவரேஜை முழுமைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கிய இலங்கை அரசிற்கும் மற்றும் TRCSLக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனூடாக நாடு முழுவதிலுமுள்ள பாவனையாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய மற்றும் சிறந்த 4பு சேவையை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் கற்றல் செயற்பாடுகள் வீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் நிலைமையின் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் அதனை கருத்திற் கொண்டு 850ஆர்ண ஒலி அலைக்கற்றை எல்லைக்குள் எமது பாவனையாளர்களுக்கு சிறந்த உள்ளக கவரேஜ் உடன் முழுமையான மாற்றத்துடன் அதிவேக வலைப்பின்னல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும்” என அவர் தெரிவித்தார்.
Bharti Airtel Lanka ஐப் பற்றி
2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு றறற.யசைவநட.டம என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago