Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 26 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தனது 'எதர காசி மெதர வாசி, சீசன் 02' குலுக்கலின் முதற்கட்ட வெற்றியாளர்களை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்நடவடிக்கை இலங்கைக்கு மிகவும் அவசியமான அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதோடு, 'எதர காசி மெதர வாசி' செலான் ரெமிடென்சஸ் ஊடாக பணம் அனுப்பும், பெறும் எந்த ஒருவருக்கும் ரூ.10 மில்லியன் பெறுமதியான பணப்பரிசுகளை வழங்கவுள்ளது.
குலுக்கலின் 1 ஆம் கட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டபோது, சஞ்சீவ ஜயநாத் (பெறுநர் பிரிவு) மற்றும் ஆர்.டபிள்யு. குசுமலதா (அனுப்புனர் பிரிவு) ஆகியோர் தலா ரூ.250,000 பணப்பரிசுகளை வென்றனர்.
'எதர காசி மெதர வாசி - சீசன் 02' ஆனது விரைவில் மாபெரும் இறுதிக் குலுக்கலோடு நிறைவுக்கு வரவிருப்பதோடு, இதன்போது ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளர் ரூ. 1 மில்லியன் பணப்பரிசைத் தட்டிச் செல்வார். தேசத்திற்கான தனது பொறுப்பினை நிறைவேற்றும் விதமாக, தனது வாடிக்கையாளர்களது பணம் அனுப்பும் சாத்தியத்தின் உச்ச பலனைப் பெறுவதற்காக இந்த இரண்டாவது சீசனை தமிழ் சிங்கள புதுவருடக் காலத்தில் செலான் வங்கி ஒழுங்கு செய்திருந்தது.
உலகளாவிய பண அனுப்புகை சேவைகள், பரிமாற்றல் நிலையங்கள் மற்றும் வங்கிகள் உட்பட பல வெளிநாட்டு முகவர்களோடு கரம் கோர்த்துள்ள செலான் வங்கி, இலங்கைக்கு பணம் அனுப்பும் தேவையோடு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பலதரப்பட்ட பண அனுப்பல் சேவைகளைப் பெற்றுத் தருகின்றது. சவுதி அரேபியாவிலிருந்து Al Bliad வங்கியின் Enjas Mobile App ஊடாக பணம் அனுப்புபவர்கள் செலான் வங்கிக்கு பணத்தை அனுப்பும்போது எவ்வித பரிமாற்றல் கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை என்பதோடு, துரித சேவையின் ஒத்துழைப்போடு உடனடியாகப் பணத்தைப் பெற முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago