2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

உள்ளூர் தரையோடுகள் மற்றும் குளியலறை உபகரண உற்பத்தியாளர்கள் வணிகச் சூழலை சமநிலைப்படுத்துமாறு கோரல்

Freelancer   / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 எனும் ஒரு புதிய ஆண்டின் விடியலில், எமது உள்ளூர் தொழில்துறைகளைக் கொண்டாடவும் அவற்றிற்கு புத்துயிர் அளிக்கவும் எமது உலகளாவிய இருப்பை உயர்த்துவதற்குமான தனித்துவமான வாய்ப்பு உதயமாயுள்ளது. எவ்வாறாயினும், எமது உள்ளூர் உற்பத்தித் துறையை அச்சுறுத்தும் பிரச்சனைக்குரிய சமநிலையற்ற தன்மை கண்ணுக்கு புலப்படாத வகையில் புதைந்துள்ளது.

இந்த சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள் உள்ளூர் தரையோடு இறக்குமதியாளர்கள் தங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரையோடுகளை ஒரு சதுர மீற்றரிற்கு USD 2.50 என்ற விலையில் மதிப்பிடுகின்றனர். இது தரையோட்டிற்கான செலவு மற்றும் கொழும்புக்கான freight கட்டணம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய குறைமதிப்பீடு இறக்குமதியாளர்களுக்கு நியாயமற்ற விலை நிர்ணய நன்மையை வழங்குகிறது. இது எங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு போட்டியிட சவாலான சூழலை உருவாக்குகின்றது.  இலங்கையில் உள்ள சுமார் 400 தரையோடு இறக்குமதியாளர்களில் 80% இற்கும் அதிகமானவர்கள் VAT பதிவின்றி இயங்குகின்றனர். இது ஒரு சீரற்ற வணிகச் சூழலை ஏற்படுத்துவதுடன் எங்கள் சந்தையின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இலங்கையின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உள்ளூர் தரையோடுகள் மற்றும் குளியலறை உபகாரண உற்பத்தித்துறை மிகவும் முக்கியமானது. உதாரணமாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே 50,000 பங்குதாரர்களை ஆதரிக்கின்ற அதேவேளை கூட்டாக உள்ளூர் தொழில்துறையில் 5,000 தனிநபர்களுக்கு தொழில்; வழங்குவதுடன் 2,438 விநியோகத்தர்களுடன்; இணைந்து, 2022/2023 நிதியாண்டில் 16.7 பில்லியனை வரியாக வழங்கியுள்ளனர்.

உள்ளூர் தரையோடுகள் மற்றும் குளியலறை உபகரண முன்முயற்சியின் (LTBI- Local Tile & Bathware Initiative) ஊடாக உடனடி கவனம் செலுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். உள்ளூர் உற்பத்தியாளர்கள் குறிப்பிடத்தக்க பாதக நிலைகளுக்கு மத்தியில் சவாலை எதிர்கொள்ளும் அதேவேளை எங்கள் சர்வதேச போட்டியாளர்கள் பல தசாப்தங்களாக பாதுகாப்புவாதம் மற்றும் அரசாங்க ஆதரவிலிருந்து பயனடைந்துள்ளனர்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்கள் சிறந்த தரத்திலான தயாரிப்புகள் பற்றி பெருமையடைகிறார்கள். இறக்குமதி செய்யப்பட்ட தரையோடுகள் பெரும்பாலும் போதுமான தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. அதேவேளை உள்ளூர் தரையோடுகள் அனைத்து 15 அத்தியாவசிய வரைகூறுகளிற்காக இலங்கை கட்டளைகள் திணைக்களத்தின் (SLSI) கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. எண்ணற்ற கொள்கலன்களை மதிப்பிடுவதில் SLSI எதிர்நோக்குகின்ற சவாலே தர உத்தரவாதத்தில் இந்த முற்றிலும் மாறுபட்ட தன்மைக்கு வழிகோலுகின்றது. இதன் விளைவாக சராசரியிலும் குறைந்த இறக்குமதி செய்யப்பட்ட தரையோடுகள் அவற்றின் பொலிவை விரைவாக இழப்பதோடு அதிருப்திக்கு வழிவகுக்கின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட தரையோடு தொழில் துறையின் தாக்கத்தை ஆராயும் போது, குவித்தல் (Dumping) அல்லது குறைத்து மதிப்பிடுதல் போன்ற ஒரு தெளிவான போக்கு வெளிப்படுகிறது. 2015 முதல் 2022 வரையான சுங்கப் பதிவுகள், சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வரும் தரையோடுகளுக்கான சதுர மீற்றரிற்கான விலை நிலையாக குறைவந்து வருவதைக் காட்டுகின்றன. உதாரணமாக, 2015/2016இல் ஒரு சதுர மீற்றரிற்கு US$ 4.45 என்ற விலையில் இருந்த சீனத் தரை தரையோடுகள், 2020/2021இல் ஒரு சதுர மீற்றரிற்கு US$ 3.44 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல் குளியலறை உபகரணங்களின் அறிவிக்கப்பட்ட மதிப்புகள் 2017/2018 முதல் 2021/22 வரை மாறாமல் உள்ளது. இவ்வாறான போக்கு மற்ற இறக்குமதிகளில் காணப்படாத நிலையில் இதன் சாத்தியப்பாட்டை கேள்விக்குள்ளாகின்றது. நீண்ட கால ஆதாயங்களுக்காக குறுகிய கால இழப்புக்களை ஏற்றுக்கொண்டு, உள்ளூர் தொழில்துறையை பலவீனப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் உள்ளதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

தனித்துவ சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக சர்வதேச ரீதியாக பாராட்டப்பட்ட, SLS தரநிலை தரையோடுகளை எமது உள்ளூர் நுகர்வோருக்கு வழங்குகின்றனர். தரத்திற்கான இந்த அர்ப்பணிப்பு உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தரையோடுகளுக்கான வலுவான விருப்பத்தை ஊக்குவித்துள்ளது. இது ஏற்றுமதிக்கு அதிக விலை கோரக்கூடிய, உயர் மதிப்பு சந்தைகள் கொண்ட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்களுக்கு வழிசமைத்துள்ளது. 

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விநியோகச் சங்கிலிகள் புதிய ஆண்டில் அதிக வரிவிதிப்புடன் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே நியாயமான மற்றும் சமநிலையான வணிகச் சூழலை நிறுவுவதற்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய சூழல் நியாயமான போட்டியை வளர்த்து, புதுமைகளைத் தூண்டி, உள்ளூர் உற்பத்தித் துறையில் புதிதாக நுழைபவர்களை ஊக்குவிக்கும் அதேவேளை வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு செலவுக் குறைப்பு வழிமுறைகளில் முதலீடு செய்ய வழிவகுத்து சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்கும்.

இலங்கை உற்பத்தியாளர்கள் 85% ஆன உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தரையோடு உற்பத்தியில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதில் முதலிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க விலை குறைப்பால்; உள்ளூர் வாடிக்கையாளர்கள் பயனடைகின்றனர். மேலும், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் சக்தி சேமிப்பு தொழில்நுட்பங்களில் முதலீடுகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை தன்னால் இயன்றதை உள்நாட்டில் உற்பத்தி செய்து, இயலாததை மாத்திரம் இறக்குமதி செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட தரையோடு தொழில்துறையின் செயற்பாடுகளை உன்னிப்பாக ஆராயும்போது, குவித்தல் அல்லது குறைத்து மதிப்பிடல் போக்கு வெளிப்படையாகத் தெரிகிறது.

வரலாற்று ரீதியாக, உள்ளூர் வணிகங்களுக்கு சமநிலைப்பாட்டை உறுதி செய்யும் வணிகச் சூழலை உருவாக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தாமதம் காட்டியுள்ளது.  இருப்பினும், எமது இருப்புக்கள் வெறும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துவிட்ட நிலையில் உடனடி பயன்பாட்டிற்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கிடைக்கின்றன. பொருளாதார சூழல் மிகவும் மோசமாக உள்ள நிலையில் தரையோடுகள் போன்ற அடிப்படை பொருட்களுக்கான உள்நாட்டு சந்தைகளை உருவாக்கி உள்ள10ர்; உற்பத்தியாளர்களின் முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் உணவு மற்றும் மருந்து போன்ற முக்கிய தேவைகளுக்காக விலைமதிப்பற்ற டொலர்களை சேமிக்கலாம்.

உள்ளூர் தொழில்துறைகளுக்கு அரசாங்க ஆதரவு தேவைப்படுகிறது. ஏனெனில் அவை நமது மூலப்பொருட்களின் மதிப்பை வளப்படுத்தி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுரங்கத் தொழிலாளர்கள், உள்ள10ர்; பல்கலைக்கழக பட்டதாரிகள், ஆராய்ச்சிகள் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி புள்ளிவிவரங்களின் சாதக நிலைக்கு பங்களிக்கின்றன. உள்ளூர் தொழில்களை ஆதரிப்பது நமது பொருளாதாரத்தை முன்னேற்றுவது மட்டுமல்லாமல் தரம் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய இரண்டிலும் நியாயமான சமநிலையை உறுதி செய்கிறது.1993/94 ஆண்டுகளில் இந்தியா அதன் உள்ளூர் தரையோடு தொழில்துறைக்கு ஆதரவளிக்கும் முகமாக சீனத் தரையோடுகள் தங்கள் சந்தையில் குவிக்கப்படுவதற்கு எதிராக சட்டங்களை செயற்படுத்தி முன்முயற்சி நடவடிக்கைகளை எடுத்தது. மூன்று தசாப்தங்களின் பின்னர் இந்தியாவின் உற்பத்தித் திறன் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. சந்தை சமநிலையை பேணும் முகமாக செழிப்பு, தரம் மற்றும் நியாயமான விலையை உறுதி செய்து உள்ள10ர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உள்ள10ர் உற்பத்தியாளர்களை புறக்கணிப்பது இறக்குமதியாளர்களுக்கு தனியுரிமையை வழங்குவதோடு பொருட்களின் தரம் மற்றும் விலை நிர்ணயம் ஆகிய இரண்டையும் பாதிக்கும்.

வளமான உள்ளூர் சந்தையுடன் இலங்கையின் தரையோடுகள் ஏற்றுமதி சந்தைக்குள் நுழைந்து தற்போதைய குறைமதிப்பிற்கு உட்பட்ட இறக்குமதி விலையை விட மூன்று மடங்கு விலையை நிர்ணயிக்கின்றன. தரையோடு உற்பத்தியாளர்கள் இந்தோ-பசிபிக் மற்றும் வளைகுடா பகுதிகளில் தங்கள் தயாரிப்புக்களை சந்தைப்படுத்தவும் விற்கவும் அலுவலகங்களை நிறுவி வருகின்றனர். இந்த வளர்ச்சியை நிலையானதாகவும் சமனானதாகவும் மாற்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் ஒத்த வணிகச் சூழலில் செயற்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இலங்கைக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நிற்கும் இவ்வேளையில் எமது உள்ள10ர் கைத்தொழில்களின் திறனை அங்கீகரித்து அரவணைப்போம். அனைவருக்கும் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் செழிப்பை தரும் பாதையை உருவாக்குவோம். நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் நிலவும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி இலங்கையை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து எமது உள்ளூர் தரையோடுகள் மற்றும் குளியலறை உபகரண உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிப்போம்.

இவ்வாறு உள்ளூர் தரையோடுகள் உற்பத்தியாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .