S.Sekar / 2022 ஜனவரி 03 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
றைனோ, தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கு முதல் 1000 கொள்கலன் கூரைத் தகடுகளை ஏற்றுமதி செய்வதை பூர்த்தி செய்துள்ளது. இதைக் குறிக்கும் விசேட நிகழ்வு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் பங்கேற்புடன் கொழும்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.ஜே.ஞானம் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

அண்மையில் இடம்பெற்ற 24ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2020/21 இல் பெறுமதி சேர்க்கப்பட்ட தாதுப்பொருட்கள் பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளராக றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதனூடாக தேசத்தின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் பிரதான நிறுவனம் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது.
றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.ஜே. ஞானம் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது குறிப்பிடுகையில், “நுகர்வோருக்கு பெறுமதி சேர்க்கும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக முதலீடுகள் மற்றும் சுய மேம்படுத்தல்களை மேற்கொண்டிருந்தமையினூடாக, சவால்கள் நிறைந்த இந்தக் காலப்பகுதியில் இந்த மைல் கல்லை எய்துவதற்கு றைனோவினால் முடிந்திருந்தது. 100% இலங்கையின் நிறுவனம் எனும் வகையில், பல தசாப்த காலமாக சிறந்த தரத்திலமைந்த தயாரிப்புகளை சந்தையில் விநியோகிக்கின்றோம். தரமான கூரைத் தகடுகள் தயாரிப்புகளுக்கான கேள்வியை தோற்றுவித்து, சர்வதேச செயற்பாட்டாளர்களுடன் போட்டியிடக்கூடிய வகையில் எம்மை தந்திரோபாய ரீதியில் மீளமைத்துள்ளோம்.” என்றார்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுரேஷ் டி மெல்; இலங்கை முதலீட்டு சபை பணிப்பாளர், பசண் வணிகசேகர; இலங்கைக்கான பாகிஸ்தானின் உயிர்ஸ்தானிகர் (இடைக்கால), தன்வீர் அஹமட்; அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ; வணிகத் திணைக்களத்தின் வணிகப் பிரிவுப் பணிப்பாளர் மற்றும் வணிக ஊக்குவிப்புத் தலைவர் ஜி எல் ஞானதேவ மற்றும் இலங்கை பாகிஸ்தான் வியாபார சம்மேளனத்தின் தலைவர் சோமசுந்தரம் தெய்வநாயகம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுரேஷ் டி மெல்,றைனோ ரூஃபிங் புரொடக்ட்ஸ் லிமிடெட் பணிப்பாளர் ஜுட் பெர்னான்டோவுக்கு நன்றி தெரிவித்து அடையாளச் சின்னமொன்றை பரிசளித்திருந்தார். பாரம்பரியமற்ற ஏற்றுமதிகள் பிரிவில் நிறுவனத்தின் சாதனையை பாராட்டும் வகையில் இது வழங்கப்பட்டிருந்தது.
ஞானம் தொடர்ந்து தெரிவிக்கையில், “அமைச்சர் மற்றும் சகல பொதுத் துறை அதிகாரிகளிடமிருந்தும் எமக்குக் கிடைக்கும் ஆதரவுக்காக நான் நன்றி தெரிவிப்பதுடன், சர்வதேச நிறுவனமாகத் திகழும் தனது பயணத்தை றைனோ தொடர்ந்து முன்னெடுக்கின்றது. தரம் மற்றும் நிலைபேறான வியாபார செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. றைனோ அணியினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன். குறிப்பாக கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான சூழ்நிலையிலும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு நிறுவனத்தினால் பங்களிப்பு வழங்க ஏதுவாக அமைந்திருந்ததுடன், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி, சர்வதேச சந்தையை சென்றடைவதற்கு ஏதுவாக அமைந்திருந்தனர். சர்வதேச சந்தையில் வளர்ச்சிக்கான புதிய பகுதிகளை இனங்காண நாம் எதிர்பார்ப்பதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்குநராக திகழ்வதற்கும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025