Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 16 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஃபினான்ஷியல் டைம்ஸ் பிரசுரமான பாங்கர் சஞ்சிகையினால் முன்னெடுக்கப்பட்ட தரப்படுத்தலில் மக்கள் வங்கி ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரதானமாக, மூலதனத்தின் மீது உயர் வருமதியைப் பதிவு செய்த சிறந்த 200 வங்கிகளில் ஒன்றாகவும் மக்கள் வங்கி அமைந்துள்ளது.
இந்த தரப்படுத்தல் தொடர்பில் மக்கள் வங்கியின் தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில்,'அரச வங்கி எனும் வகையில், மக்கள் வங்கி இரு பொறுப்புகளைக் கொண்டுள்ளது. அரசாங்கத்துக்கு தேசிய பொருளாதார இலக்குகளை எய்துவதற்கு உதவிகளை வழங்குவது மற்றும் சகல பங்காளர்களுக்கும் அனுகூலமளிக்கக்கூடிய வகையிலான நிலைபேறான பெறுமதியை ஏற்படுத்துவது ஆகியன அவையாகும்.
இதன் பிரகாரம்,சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாகத் திகழ்வது மற்றும் மூலதனத்தின் மீது உயர் வருமதியைப் பதிவு செய்த சிறந்த 200 வங்கிகளில் ஒன்றாகவும் திகழ்வதனூடாக,வங்கியின் வெற்றிகரமான செயற்பாடு மற்றும் வினைத்திறன் போன்றன மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 360 பாகை அடிப்படையில் வினைத்திறனை வெளிப்படுத்துவது என்பதை நாம் தொடர்ச்சியாக எய்தி வருகின்றோம்.
தற்போது, அரசாங்கத்தின் பொருளாதார மீட்சி தொடர்பான சகல செயற்பாடுகளுக்கும் உதவிகளை வழங்குவது பற்றி நாம் கவனம் செலுத்துகின்றோம். எம்மீது எமது வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக நம்பிக்கை கொண்டுள்ளமைக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிப்பதுடன், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். மக்கள் வங்கியின் வெற்றிகரமான செயற்பாடு என்பது, உங்களுக்குரியது.' என்றார்.
மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ரஞ்சித் கொடிதுவக்கு கருத்துத் தெரிவிக்கையில்,'வங்கியினால் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த வியாபார மற்றும் செயற்பாடுகளின் இறுதிப் பெறுபேறாக இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள அனைவருக்கும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதுடன், நிதி வழங்கல் செயற்பாட்டை இலகுபடுத்துவது பற்றியும் ஆராய்ந்து வருகின்றோம்.
பல கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், சகாயமான வட்டி வீதங்களில் இவை அமைந்துள்ளன. இந்த நெருக்கடியான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாம் எப்போதும் தயாராகவுள்ளோம்.' என்றார்.
மக்கள் வங்கி கிளை வலையமைப்பில் 739 கிளைகள் நாடு முழுவதிலும் காணப்படுவதுடன், 13 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகின்றது. நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உயர் வினைத்திறன் வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இயங்கும் மக்கள் வங்கியின் சகல கிளைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நகரங்களிலும், மாவட்டங்களிலும் மற்றும் மாகாணங்களிலும் இந்தக் கிளைகள் அமைந்துள்ளதுடன்,யுவுஆஇயந்திரங்களின் வலையமைப்பு 755 ஆகவும், பண வைப்பு இயந்திரங்கள் (ஊனுஆ) 270 ஆகவும்,220 முழைளமள களாகவும் அதிகரித்துள்ளன.
படம் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ரஞ்சித் கொடிதுவக்கு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
55 minute ago
25 Apr 2025