2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

உயிரியல் பரம்பல் மீளமைப்பு முயற்சிகளை Star Garments Group உறுதி செய்கின்றது

Freelancer   / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வருடாந்தம் 8000 ஹெக்டெயர்கள் வீதம் வனாந்தர அழிப்புக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது. உலகின் மழைக் காடுகளில் 2030 ஆம் ஆண்டளவில் 10 சதவீதம் மாத்திரமே எஞ்சியிருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். Star Garments Group (“Star”) தனது நிலைபேறாண்மை மூலோபாயத்தின் அங்கமாக, தனது தொழிற்சாலை மற்றும் அலுவலக வளாகங்களில் உயிரியல் பரம்பலை மீள நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது.

2023 உலக கடல்புல் தினத்துடன் உயிரியல் பரம்பல் மறுசீரமைப்பு பணிகளுக்கான தனது அர்ப்பணிப்பை Star ஆரம்பித்திருந்தது. 3 ஹெக்டெயர்களில் கண்டல்தாவரங்களை மீளுருவாக்கவும் உறுதியளித்திருந்தது. சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான பகுதியில் அமைந்துள்ள ஆனவிழுந்தாவ ரம்சார் ஈரநில காப்பக பகுதியில் இந்த பணிகளை மேற்கொள்ள முன்வந்திருந்தது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனாந்தர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை கடற்படை, வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) மற்றும் வயம்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து உயிரியல் பரம்பல் மீளநிறுவும் பயணத்தை Star முன்னெடுத்திருந்தது. ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞான ரீதியான கொள்கைகளைப் பின்பற்றி இயற்கையான முறையில் கண்டல்தாவரங்கள் மீளுருவாவதை துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தது. இந்தத் திட்டத்துக்கு, 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கான UN Decade of World Restoration Flagship விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், மீன்-எலும்பு வடிவிலான நீர் பிரவேசிக்கக்கூடிய வழிகள் இலங்கை கடற்படையினால் வழங்கப்பட்ட தேசப்படத்தின் உதவியுடன் தயார்ப்படுத்தப்பட்டு, இந்த கைவிடப்பட்ட காணியினுள் நீரை கொண்டு வர முடிந்திருந்தது. திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை Star அணியினர் 500 கண்டல்தாவர கன்றுகளை நாட்டி ஆரம்பித்திருந்தனர்.

தற்போது இலங்கையின் கண்டல்தாவர பரம்பல் 15000 – 19000 ஹெக்டெயர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பின் 0.3 சதவீதமாகும். இதனூடாக, நாட்டின் கண்டல்தாவர பரம்பல் மிகவும் குறைவான நிலையில் காணப்படுவதுடன், காலநிலை மாற்றங்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்படக்கூடிய நிலையை கொண்டுள்ளது. நாட்டின் வனாந்தரத்தின் உள்ளக பகுதியாக கண்டல் தாவரங்கள் அமைந்திருப்பதுடன், இலங்கையின் மொத்த வனாந்தரப் பரம்பலின் 2 சதவீதமாக உள்ளது. மேலும், வேகமாக அழிவடைந்து வரும் வனாந்தரப் பகுதிகளின் 17 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

"blue forests" என அறியப்படும் கரையோர மற்றும் கடல் சூழல்கட்டமைப்புகளில் கண்டல் தாவர வனாந்தரங்கள், கடல் புற்கள் மற்றும் அலை உப்பு சதுப்புப் பகுதிகள் போன்றன அடங்கியுள்ளதுடன், இவை இயற்கையில் காணப்படும் வினைத்திறனான காபன் பிரித்தெடுப்பு அங்கங்களாகும். வெப்ப வலய மழைக்காடுகளுடன் ஒப்பிடுகையில் பத்து மடங்கு அதிகமாக காபனீரொட்சைட் அலகை தேக்கி வைத்திருக்கும் ஆற்றலை கொண்டுள்ளதால், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான உறுதியான கவசங்களாக அமைந்துள்ளன. இந்த இயற்கை சூழல்கட்டமைப்புகளினால், அனர்த்தங்கள் ஏற்படுவதிலிருந்து நாட்டின் கரையோர பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது. கண்டல்தாவர சூழல்கட்டமைப்புகளினால், பல பின்தங்கிய சமூகங்களில் நிலைபேறான வாழ்வாதாரங்கள் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X