Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சி, ஹம்பாந்தோட்டை யூனிவேர்சல் மார்ஷல் ஆர்ட்ஸ் அக்கடமிக்கு (Universal Martial Arts Academy - UMA Academy) ரூ. 200,000 தொகையை நன்கொடையளித்துள்ளது. இப்பிராந்தியத்திலுள்ள அபிலாஷைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு அத்தியாவசியமான விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்த நன்கொடை உபயோகிக்கப்படும்.
தேசிய பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் பயின்றுகொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களைத் தரப்படுத்துவதை இலக்காகக் கொண்டும், சர்வதேச பாடத்திட்டம் தொடர்பான செயல்முறைக் கல்விக்கும் UMA Academy ஏற்பாடு செய்திருந்த இரு நாள் செயலமர்வின் போது இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டையிலுள்ள முன்னணி மார்ஷல் ஆர்ட்ஸ் கற்கைநிறுவனமான UMA Academy> திறமைமிக்க விளையாட்டு வீரர்களைத் தோற்றுவிப்பதில் சிறந்த சாதனை வரலாற்றைக் கொண்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்துடன், இந்த அக்கடமியின் பயிற்றுவிப்பாளர்கள் பல்வகைப்பட்ட மார்ஷல் ஆர்ட்ஸ் திறமைகளை வளர்க்கும் அமர்வுகளை நடாத்தி வருகின்றனர்.
பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் யாக்கூத் நளீம் அவர்கள் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கையில், 'வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் விளையாட்டுக்களின் வலிமை மீது பைரஹா ஃபாம்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. கோழி தொடர்புபட்ட எமது தயாரிப்புக்கள் விளையாட்டு வீரர்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்தை வழங்குவதுடன், அவர்களுடைய பெறுபேற்றுத்திறனுக்கு உந்துசக்தியளித்து, அவர்கள் தம்முடைய இலக்குகளை எட்டுவதற்கு உதவி வருகின்றன. ஹம்பாந்தோட்டையில் இளம் விளையாட்டு வீரர்களை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்ற UMA Academy க்கு ஆதரவளிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்,' என்று குறிப்பிட்டார்.
UMA Academy ஐச் சேர்ந்த எம். எம். முஷ்ஃபீக் கருத்து வெளியிடுகையில், 'பைரஹா ஃபாம்ஸ் வழங்கியுள்ள மனமுவந்த நன்கொடைக்காக நாம் இந்நிறுவனத்திற்கு ஆழ்ந்த நன்றிக்கடன்பட்டுள்ளோம். இந்த உதவியானது எமது விளையாட்டு வீரர்கள் தமது பயிற்சிகளின் போது சிறப்பாகச் செயற்படுவதற்கு தேவையான உபகரணங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு எமக்கு இடமளிக்கும். இளம் திறமைசாலிகளை வளர்த்து, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுவீரர்களைத் தோற்றுவிப்பதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், இந்த நன்கொடை எமது முயற்சிகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்,' என்று குறிப்பிட்டார்.
பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சியின் மனமுவந்த பங்களிப்பானது அதன் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளுடன் ஒன்றியுள்ளதுடன், இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு உதவுவதில் அதன் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அபிலாஷைமிக்க விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு அவர்களுக்கு வலுவூட்டுவதில் இந்த நன்கொடை முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
பைரஹா ஃபாம்ஸ் பிஎல்சி, இலங்கையில் சுமார் 50 ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சித் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து வருவதுடன், அதன் தரமான கோழி இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி தயாரிப்புக்களுக்கு இல்லங்கள் மத்தியில் பிரபலமான நாமமாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் வழங்கல்சங்கிலியுடன் தொடர்புபட்ட பல்வேறு தயாரிப்புக்களையும், செயல்முறைகளையும் தானே நிர்வகிக்கும் வழியிலான வணிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. சீரான வளர்ச்சிப்பாதையில் பயணித்துவருகின்ற இந்நிறுவனம், பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விருது அங்கீகாரங்களைச் சம்பாதித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
26 minute ago
36 minute ago