2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் ’செரண்டிப்’ கோதுமை மா ஆலை

Mayu   / 2024 மே 30 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விசேட ஆலைச் சுற்றுப்பயணம் ஊடாக, செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனமானது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு எவ்வாறு பங்களித்து வருகின்றது என்பதை பகிர்ந்துகொண்டார்கள்.

டுபாயைத் தலைமையகமாகக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முன்னணி பல்வகை குடும்ப வணிகங்களில் ஒன்றான Al Ghurair  நிறுவனத்தின் முழு உரிமையைக் கொண்ட உபநிறுவனமான செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் (SFML) கொழும்பு துறைமுகத்தில் உள்ள தனது அதிநவீன ஆலையில் ஊடகவியலாளர்களுக்கான விசேட சுற்றுப்பயணமொன்றை செவ்வாய்க்கிழமை (28) ஏற்பாடு செய்திருந்தது.

இந்தச் சுற்றுப் பயணத்தின் ஊடாக இலங்கையின் உணவுப் பாதுகாப்பு, கோதுமை தயாரிப்புத்தொழில்துறையில் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் நிலைபேறு தன்மையை மேம்படுத்துவதில் செரண்டிப் கோதுமை ஆலை நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு வெளிப்பட்டது.

‘நாட்டுக்கு ஊட்டமளித்தல்’ என்ற பரந்த நோக்கத்தின் அடிப்படையில் செற்பட்டுவரும் செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம், கடந்த 15 வருடங்களாக இலங்கையின் உணவுத் தொழில்துறையின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக விளங்குகின்றது.

அதிநவீன சுவிஸ் பேக்ளர் (Swiss Buhler) தொழில்நுட்பத்தின் பயன்பாடு, சிறந்த தரம்மிக்க கோதுமை மாவை விநியோகித்தல் மற்றும் இலங்கையின் சந்தைக்கு புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்துவது என்பன செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றன.

இந்நிறுவனத்தின் 20ற்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட கோதுமை மா தயாரிப்புக்கள் சிறிய பேக்கரித் தயாரிப்பாளர்கள் முதல் பாரிய அளவிலான உற்பத்தியாளர்கள் வரை பயன்படுத்தப்பட்டுவருவதுடன், வீட்டுப் பாவனையாளர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

பேக்கரிஉற்பத்திகளுக்கான தனது முன்னணி கோதுமை மா தயாரிப்புக்களின் புதிய இணைப்பாக பெருந்தோட்ட சமூகத்துக்கான வலுவூட்டப்பட்ட அதி சக்தி கோதுமை மா மற்றும் தொற்றா நோய்களை நிவர்த்தி செய்வதற்கான ஃபைபர் பிளஸ் போன்றவை உள்ளடங்குகின்றன.

பெறுமதி சேர்க்கப்பட்ட இந்தத் தயாரிப்புக்கள் இலங்கையின் உணவுச் சூழலை மேம்படுத்துவதற்கும்,  ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன.

நிலைபேறுதன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் செரண்டிப் கோதுமை மா நிறுவனத்தின் யெற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நிலைபேறுதன்மைக்கு கணிசமான பங்களிப்பைச் செலுத்தும் நோக்கில் பாரிய தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு tanker silo செயற்பாடுகளை வழங்கி எரிசக்தி நுகர்வு மற்றும் பணியாளர் தேவையைக் குறைத்து, நிலப்பரப்புக் கழிவுகளை குறைக்கும் வகையில் இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பைப் பேணுவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் வகையில், வருடம் முழுவதும் தடைப்படாத விநியோகத்தை உறுதிசெய்வதற்காக செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் எப்பொழுதும் மூன்று மாதங்களுக்குத் தேவையான கோதுமை இருப்புத் தொகையைப் பேணி வருகின்றது.

நிறுவனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படும் ஐந்து களஞ்சியங்கள் மூலோபாய ரீதியில் நாடு முழுவதிலும் அமைந்திருப்பதுடன்,  இதன் ஊடாக செரண்டிப் கோதுமை ஆலை நிறுவனம் தனது உற்பத்தி நாடு முழுவதிலும் கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்கின்றது.

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் ஷர்மா குறிப்பிடுகையில், “நிலைபேறான மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களுடன் கூடிய உணவுத் தீர்வுகள் மூலம் இலங்கை முழுவதிலுமுள்ளவர்களை ஊட்டமளிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் கூட்டுப்பொறுப்பின் உயர் தரத்தை நிலைநாட்டி எமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நம்பிக்கையுள்ள பங்காளராக விளங்குவதுமே எமது நோக்கமாகும்”என்றார்.

செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தனது கோதுமை தயாரிப்புக்களுக்கு அப்பால் சமூகப் பொறுப்பு மிக்க முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. முதியோர் இல்லங்களில் உள்ள சிரேஷ்ட பிரஜைகள் எசல பெரஹரவைப்

பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்கும் ‘செரண்டிப் உத்தம தலதா’ நிகழ்ச்சித்திட்டம் இதில் ஒன்றாகும். இதனைவிடவும், ஒதுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த சமூகத்தை வலுவூட்டும் ‘7 ஸ்டார் மனுசத்கார’ நிகழ்ச்சித்திட்டம் சமூக முன்னேற்றம் தொடர்பான செரண்டிப் கோதுமை மா ஆலையின் அர்ப்பணிப்புக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரம்மிக்க கோதுமை மாவை நுகர்வது எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

 உயர் தரம் மற்றும் கடுமையான கட்டுப்பாட்டுத் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க சிறந்த கோதுமை மா வழங்கப்படுவதும் உறுதிசெய்யப்படுகின்றது.

Al Ghurair  நிறுவனம் பற்றி:

மத்திய கிழக்கில் உள்ள பாரிய பல்வகை குடும்ப வணிகக் குழுமங்களில் ஒன்றாக விளங்கும் Al Ghurair  நிறுவனம்,உணவு மற்றும் ஆராய்ச்சி,ரூபவ் ஆதனங்கள், கட்டுமானம் மற்றும் சேவைகள்ரூபவ் வலுசக்திரூபவ் இயக்கம் மற்றும் தொழில்முயற்சி ஆகிய ஆறு முக்கிய தொழில்துறைகளில் தனது வணிகத்தை வியாபித்துள்ளது.

1960ஆம் ஆண்டு வர்த்தக வணிகமாக ஆரம்பிக்கப்பட்ட Al Ghurair நிறுவனம்ரூபவ் வளர்ச்சியுற்று வரும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில்துறை மற்றும் வணிகத்தின் முதலாவது தூண்களில் ஒன்றாகவும் விளங்கியது.

எளிமையான தொடக்கத்தில் ஆரம்பித்து, புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியின் பெருமையான

வரலாற்றுடன், Al Ghurair குடும்பத்தின் பெயரானது மதிப்புமிக்க நாட்டின் பாரம்பரியம், பரிணாம வளர்ச்சி மற்றும் நோக்கம் என்பவற்றின் மறுபெயராகவும் பதிவாகியுள்ளது.

டியேராவில் தலைமையகமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் 50ற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது பல்வகையான வணிக செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதுடன், ஏறத்தாள 28,000ற்கும் அதிகமான பணியாளர்கள்

இதில் பணியாற்றுகின்றனர். நிறுவனம் அதன் 60 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் பேணி வருவதுடன், ‘வாழ்க்கையை மேம்படுத்தல்’ என்ற நோக்கத்தின் கீழ் தான் செயற்படும் சமூகங்கள் மத்தியில் அர்த்தமுள்ள மற்றும் நிலைபேறான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்துவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X