Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 20 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP), இணைந்து இலங்கையில் நிலைபேறான மற்றும் காலநிலைக்கு ஏற்ற விவசாயத்தை நோக்கிய அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. உலக உணவு தினத்தை முன்னிட்டு இந்த அழைப்பைவிடுத்துள்ளன.
FAO மற்றும் UN Water ஆகியன ஒன்றிணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் நன்னீர் வளங்கள் மற்றும் அவற்றின் நிலைத்திருக்கும் தன்மையின் மீதான மனித நடவடிக்கைகளின் கணிசமான அழுத்தத்தை பிரதிபலிக்கும் வகையில், 90.8 வீத குறிகாட்டியுடன் இலங்கை 'உயர் நீர் அழுத்தத்திற்கு உள்ளானதாக' வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பெறப்படும் மொத்த நன்னீர் வருடாந்தம் 12.95 பில்லியன் கனமீற்றர் என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்நன்னீரில் 82 வீதம் நெல் நீர்ப்பாசனத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் 5 வீதத்திற்கும் அதிகமான அளவு மற்ற பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய காலநிலை இடர் சுட்டெண்ணில், குறிப்பாக நீர் வளங்கள் மீதான தாக்கத்துடன் தொடர்புடைய காலநிலை அபாயங்களின் அடிப்படையில் இலங்கை தொடர்ந்து உயர்நிலையில் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, ஐ.நா. உணவு முகவர்கள் (FAO, IFAD, மற்றும் WFP) இலங்கை விவசாய உணவு முறைகளை மாற்ற வேண்டியதன் அவசியத்தை கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பங்குபற்றிய உலக உணவு தினத்தை நினைவுகூரும் நிகழ்வில் வலியுறுத்தினார். இந்நிகழ்வு, முகவர்களால் ஆதரிக்கப்படும் நவீன அணுகுமுறைகள், நிலைபேறான மற்றும் காலநிலை-எதிர்ப்பு விவசாயத்தை நோக்கி தேசிய அளவிலான வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது. இளம் காலநிலை ஆர்வலர் தாரிகா பெர்னாண்டோவின் விவாதங்கள், கலை மற்றும் சிறப்பு உரை போன்ற நிகழ்வுகள் மூலம் இளைய தலைமுறையினரின் குரல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் பேசிய ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச், 'அதிகரித்துவரும் நீர் அழுத்தம் மற்றும் காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் போது, நிலைபேறான மற்றும் காலநிலை-எதிர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கையுடன் இணைந்து அதன் நீர் மற்றும் உணவு அமைப்புக்களை பலப்படுத்துவதற்கு தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அனைவருக்கும் போதுமான மற்றும் போசாக்கான உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது' எனக்குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான FAO பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கையின் விவசாய உணவு முறைகளை மாற்றியமைக்க உதவுவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். 'எதிர்வரும் தலைமுறைகளுக்கு இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இலங்கையின் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகள் காலநிலையைத் தாங்கக்கூடியவை என்பதை உறுதிப்படுத்த, அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற FAO உறுதிபூண்டுள்ளது. கழிவுகள், மாசுபாடு மற்றும் காலநிலை பாதிப்புகளை குறைக்க நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,' என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago