2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களை AIA இன்ஷுரன்ஸ் பாராட்டு

S.Sekar   / 2021 மார்ச் 15 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்கள் 2020 விருதின் வெற்றியாளர்களை AIA இன்ஷுரன்ஸ் பாராட்டிக் கௌரவித்திருந்தது. இந்த விருதானது நிறுவனங்களின் நிதியியல் செயற்திறனை மட்டும் கருதாமல் அவர்களுடைய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள்,

முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான பெறுமதி உருவாக்கத்தினையும் கருத்திற்கொண்டு அந்நிறுவனங்களைக் கௌரவிப்பதனை நோக்காகக் கொண்டுள்ளது. நிலைத்தன்மையான தீர்மானம், அதிகாரம், நிலைபேறான வளர்ச்சி, மிகச்சிறந்த வியாபாரச் செயற்திறனை உருவாக்கல் ஆகியவற்றினை நிரூபிப்பதற்காக இந்த மதிப்பிற்குரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்த 25 நிறுவனங்களையும் AIA மிகவும் பாராட்டியிருந்தது. இலங்கை சர்வதேச வர்த்தகச் சம்மேளனம் (ICCSL) மற்றும் ஏனைய இணைந்த அனுசரணையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருது வழங்கல் நிகழ்வில் இவ்வருடமும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிளாட்டினம் அனுசரணையாளராக AIA செயற்பட்டிருந்தது.

AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், 'ஆசியாவின் முதன்மையான ஆயுள் காப்புறுதி வழங்குநராகவும் மற்றும் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக (குளோபல் பேங்கிக் என்ட் பைனான்ஸ் ரிவியு சஞ்சிகையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள) AIA நிறுவனத்தின் பிரதான தத்துவமானது மிகச்சரியான விடயத்தை, சரியான வழியில், சரியான ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்வதாகும். அடிப்படையில் சரியான முடிவுகளுக்காக, சரியான வழியில் சரியான விடயத்தை மேற்கொள்வதானது வியாபாரச் சிறப்பம்சம் மற்றும் நெறிமுறைகளைக் கௌரவிக்கும் இந்ந நிகழ்வுடன் நாங்களும் இணைவதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றோம். நாங்கள் நேர்மையினையும், நாணயத்தினையும் மிகவும் உயர்வான கௌரவமிக்க இடத்திலேயே நிலைநிறுத்துகின்றோம். மேலும் தங்களது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் பொது மக்களுக்கு பெறுமதியினை உருவாக்குவதில் எங்களுடைய மதிப்பினைப் பகிர்ந்து கொள்ளும் புகழ்பெற்ற நிறுவனங்களைப் பாராட்டிக் கௌரவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .