Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Janu / 2024 மே 09 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றில் பொதுவாக ஆண்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் துறையில், மினெட் டி சில்வா (1918–1998) முதல் பெண்மணியாக கட்டிடக்கலை மட்டுமல்லாது எழுத்து, கற்பித்தல் மாறும் கற்கைநெறிகையிலும் முன்னோடியாவர். இலங்கையின் பெண் கட்டிடக் கலைஞரான மினெட் டி சில்வா—Studio of Modern Architecture—எனும் கட்டிடக்கலை பணியிடத்தை 1948ம் ஆண்டு கானிடையில் தொடங்கினார். தனது சொந்த கட்டிடக்கலை பணியிடத்தை உலகிலேயே முதலாவது பெண்ணாக தொடங்கியவராவார். Royal Institute of British Architects (RIBA) 1948ம் ஆண்டு முதலாவது ஆசிய பெண்மணியாக துணைமையாவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் Sri Lanka Institute of Architects (SLIA) 1966ம் ஆண்டு அவரின் கட்டிடக்கலை துறையில் உன்னதமான பங்களிப்புக்கு தங்கப்பதக்கம் வழங்கினர்.
டி சில்வாவின் கட்டிடக்கலை பண்பான்மையானது நவீன மற்றும் பாரம்பரிய இலங்கை அழகியலைக் கொண்ட தனித்துவம் பெற்றதாகும். எளிமையான, நடைமுறைக்கு ஏற்ப மற்றும் உள்ளூர் கலாசாரத்திற்கு ஏற்ப இலங்கையின் பாரம்பரிய கைவேலை முறைகளை அவர் தனது கட்டிடக் கலையில் உள்ளடக்கினார்.
டி சில்வா அனைவருக்குமான வசிப்பிடம், எல்லோரும் சௌகரியமாக வாழக்கூடிய அழகாக வடிவமைக்கப்பட்ட வீடுகள் அனைவருக்கும் உரித்தானது என தீவிரமாக நம்பினார். அவரின் பணியில் அவரின் சமூக பொறுப்பை மற்றும் கட்டிடக் கலைஞர் ஒருவரால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கக்கூடிய சக்தியை உணர்ந்தமையை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியானது நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தில் (MMCA இலங்கை), ஜூலை 7 வரை, வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அரசாங்க பணியாளர்களுக்கான விலை மலிவான வசிப்பிடத்தை உருவாக்கி, தனது சமூக பொறுப்பை கட்டிடக்கலையினூடாக இலங்கையில் முன்னெடுத்த நபராவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago