2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் நன்மதிப்புடைய உணவு மற்றும் பான வகை நிறுவனமாக நெஸ்லே

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

LMD இன் மிகவும் நன்மதிப்புடைய நிறுவனங்களின் தரவரிசை வெளியீடு 2022 இல், இலங்கையில் மிகவும் நன்மதிப்புடைய உணவு மற்றும் பான வகை நிறுவனமாக நெஸ்லே லங்கா நிறுவனம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பல்வேறு தொழில் துறைகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வர்த்தக நிறுவனங்களில், நெஸ்லே நிறுவனம் மிகவும் நன்மதிப்புடைய முதல் 20 நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

'எமது வாக்குறுதியான 'நல்லுணவு, நல்வாழ்வு' என்பதற்கு உண்மையாக அர்த்தம் கற்பிக்கும் வகையில், 115 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமான குடும்பங்கள், வலுவூட்டப்பட்ட சமூகங்கள் மற்றும் பசுமையான இலங்கைக்கு பங்களிக்க நாங்கள் பல்வேறு முயற்சிகள் மூலம் பங்களித்து வந்துள்ளோம். உணவு மற்றும் பான வகைப் பிரிவில் 'துறை சார் வெற்றியாளராக' அறிவிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டில் நாம் ஆழமாக வேரூன்றியுள்ளதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், இது போன்ற நன்மதிப்பிற்குரிய தரவரிசையில் நாமும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நாம் பல சவால்களை எதிர்நோக்கும் இவ்வேளையில், எமது அன்பிற்குரிய இலங்கை நுகர்வோருக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கும் அதே சமயம், எமது வழங்கல் சங்கிலியிலுள்ள எம்முடன் தொடர்புபட்ட தரப்பினருடன் இணைந்து, சமூகங்களுக்கும், பூமிக்கும் நன்மைபயக்கும் எமது வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதற்கு இந்த அங்கீகாரம் உண்மையிலேயே எமக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது,' என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜேசன் அவன்சென்யா கருத்துத் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பான வகை நிறுவனமாக, நெஸ்லே ஆனது 115 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழ்ந்து வந்துள்ளது. 'இன்றும், எதிர்வரும் தலைமுறையினருக்கும் என அனைவரதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உணவின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவது' என்ற அதன் நோக்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, நெஸ்லே தனது பல்வேறுபட்ட உணவு மற்றும் பான வகை வரிசை மூலம் இளமை முதல் முதுமை வரை தலைமுறை தலைமுறையாக நுகர்வோருக்கு ஊட்டமளித்து வருகிறது.

இலங்கையில் விற்பனை செய்யப்படும் நெஸ்லே தயாரிப்புகளில் 90% க்கும் அதிகமானவை குருநாகலில் உள்ள அதன் அதிநவீன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுவதால், இந்நிறுவனம் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது. நிறுவனத்தால் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள 800 க்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கு மேலதிகமாக, தேங்காய்ப் பால் மாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும், இலங்கையில் அதிகளவில் புதிய பால் சேகரிப்பாளர்களில் ஒன்றாகவும், நெஸ்லே லங்கா நிறுவனம் உள்நாட்டு சமூகத்திற்கும் மற்றும் தனது வழங்கல் சங்கிலியிலுள்ள 25,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பாற்பண்ணையாளர்கள் மற்றும் ஏனைய வணிகப் பங்காளர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. 2050 ஆம் ஆண்டளவில் தனது வழங்கல் சங்கிலி முழுவதும் நிகர பூச்சிய உமிழ்வை அடையும் நோக்கத்தை எய்துவதன் மூலம், அதன் தயாரிப்புகள் பூமிக்கு நல்லவை என்பதை உறுதிப்படுத்தவும் நிறுவனம் வலுவான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X