2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

இலங்கை வரி வருமானத்தை அதிகரிப்பதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் Moody’s

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அடங்கலாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகள், தமது வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பதுடன், மத்திய கால அடிப்படையில் மீட்சியைப் பதிவு செய்வதில் மேலும் தடைகளை எதிர்கொள்ளும் என, சர்வதேச தரப்படுத்தல் முகவர் அமைப்பான Moody’s அறிவித்துள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக வளர்ந்து வரும் சந்தைகளின் இறையாண்மைகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வருமான இழப்புகளை எதிர்கொள்ளும். அரசாங்கத்தின் வருமானம் ஈட்டக்கூடிய செயற்பாடுகள் நிறைவேற்றப்படுமாயின், அவை எதிர்வரும் ஆண்டுகளில் பிரதான வருமானமீட்டும் செயற்பாடுகளாக அமைந்திருக்கும் என, அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.   
 நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன், வளர்ந்து வரும் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள் வரி அறவிடும் செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தும்.

எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சியை விட வேகமாக வருமானத்தை ஈட்டுவதில் ஒரு சில அரசாங்கங்கள் மாத்திரமே வெற்றியீட்டியுள்ளன எனவும் Moody’s சுட்டிக் காட்டியுள்ளது.   

 இந்த விடயம் தொடர்பில் Moody’s வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறையாண்மை என்பது ஏற்​ெகனவே காணப்படுவதுடன், கொஸ்டா ரிகா போன்ற குறைந்த வரி அறவீடுகளில் கவனம் செலுத்துவது அல்லது ஜோர்ஜியா, மொன்டென்க்ரோ ஆகிய நாடுகளில் அமுலாக்கப்பட்ட வினைத்திறன் வாய்ந்த வரிக் கொள்கை மாற்றங்கள் போன்றன சிறப்பாக காணப்படும். இறையாண்மைகள் தமது வரி அறவீட்டை அதிகரிப்பதில் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னரே நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தன. உதாரணமாக டன்சேனியா, எதியோப்பியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதோஷ் போன்ற நாடுகளைக் குறிப்பிட முடியும். இந்த நாடுகள் மேலதிக தடைகளை எதிர்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சகல வளர்ந்து வரும் சந்தைகளும், அடுத்த ஆண்டில் பாதீட்டின் துண்டு விழும் தொகையில் குறைப்பை பதிவு செய்யும் என்பதுடன், வருமானமீட்டுவதில் அதிகளவு கவனம் செலுத்தும். இந்த நாடுகளின் வருமானம் என்பதுடன், தொற்றுப் பரவலுக்கு முன்னர் காணப்பட்ட பெறுமதிகளை விட குறைவாக அமைந்திருக்கும் என்பதுடன், சர்வதேச மீட்சியில் பின்னடைவையும் ஏற்படுத்தும். சராசரியாக, வளர்ந்து வரும் சந்தைகள் 2020இல் மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 2.1 சதவீத வருமான இழப்பை பதிவு செய்யும்.  

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் என்பது வளர்ந்து வரும் சந்தைகளின் அரசாங்கங்களுக்கு வருமான உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்தன என Moody’s இன் பிரதித் தலைவர் லுசி வில்லா தெரிவித்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X