Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 29 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வங்கியியல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் அதிக வாடிக்கையாளர்களின் விசாரணைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் வசதியானதும் வினைத்திறன் மிக்கதுமான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் வகையிலும் அதன் 24x7 தொடர்பு மையத்தை பல தொடர்பு வழித் தடங்களுடன் ஒருங்கிணைத்து மேம்படுத்தியுள்ளது.
தொடர்பு மையத் துறையில் சிறந்து விளங்கும் ஓர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இப்புதிய வாடிக்கையாளர் தொடர்பு மையத் தீர்வின் மூலம், வங்கி ஒரு OPEX மாதிரித் தொடர்பு மையத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்பயனாக, இனிமேல் வாடிக்கையாளர் சேவை அலுவலருடன் தொடர்புகொள்வதற்கு முன்னர் எந்தவொரு வாடிக்கையாளரும் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை என்பதுடன் இது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்ததோர் அனுபவத்தை வழங்கும் முயற்சியாகவும் விளங்குகிறது.
புதிய தொடர்பு மையம் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு அழைப்பு முறை விருப்பங்களைக் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசிமூலம் மட்டுமல்லாமல், WhatsApp, Chatbot & Live agent என்பவற்றுடனான Web chat, Skype, Messenger, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் போன்ற சமூக ஊடகங்களின் வழியாகவும் தொடர்புகொள்ளமுடியும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற எமது தொழில்முறையான முகவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கனிவுடன் நிறைவேற்றிச் சிறந்ததோர் வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவர்.
மேலும், இத்தொடர்பு மையமானது IVR எனும் (மும்மொழி) தொடர்பு மொழி அறி கருவியுடன் உள்வரும், வெளிச்செல்லும் அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அது தன்னியக்கமாகவே வாடிக்கையாளரின் மொழியினைக் கண்டறிந்து அதற்குரிய அலுவலருடன் இணைப்பினை ஏற்படுத்துகிறது. மட்டுமல்லாமல், வெளிச்செல்லும் அழைப்பினூடாக வங்கியின் பொருட்கள், சேவைகள், விசேட சலுகைகள் என்பன பற்றிய செய்திகளை வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டும் தன்னியக்கக் குறுஞ்செய்திகள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு அறியத்தரமுடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago