Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 மே 16 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, ஆட் பதிவுத் திணைக்களத்துடன் கைகோர்த்து, SLT-MOBITEL இடமிருந்து வாடிக்கையாளர்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது டிஜிட்டல் முறையில் தேசிய அடையாள அட்டையை பரிசீலித்து உறுதி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆளுநர் நாயகம் வியானி குணதிலக மற்றும் மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென ஆகியோரிடையே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆட் பதிவுத் திணைக்களத்துடனான SLT-MOBITEL’இன் பங்காண்மையினூடாக, வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை பரிசீலிக்கும் வசதி தற்போது அதன் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, உறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளர் அறிந்திருப்பு தகவல்களை பெற்றிருப்பதை SLT-MOBITEL உறுதி செய்கின்றது. நிறுவனத்தினால் புதிய இணைப்புகள் மற்றும் இதர சேவைகள் வழங்கப்படும் போது, மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் இடம்பெறுவதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன் தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவியாக அமைந்திருக்கும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்புத் தீர்வுகளை வழங்கி தேசத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளை முன்னெடுப்பதில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநர் எனும் வகையில், SLT-MOBITEL இனால் அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
52 minute ago
3 hours ago