2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆசிரி வைத்தியசாலை குழுக்களுக்கு அவுஸ்திரேலிய சுகாதாரபராமரிப்பு அங்கிகாரம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிவு, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், பரிவான கவனிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும், ஆசிரி வைத்தியசாலை குழுவில் நோயாளர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. குழுமத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பராமரிப்பில் உயர் தரத்தை பேணுகின்றமைக்காக, கொழும்பில் அமைந்துள்ள ஆசிரி சேர்ஜிகல் மற்றும்  மெடிகல் வைத்தியசாலைகள் மற்றும் காலி மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள ஆசிரி வைத்தியசாலைகளுக்கு அண்மையில் அவுஸ்திரேலிய சம்மேளனத்தின் சுகாதாரபராமரிப்பு நியம சர்வதேச அங்கிகாரம் (ACHSI) வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக பல உயிர்களை பாதித்துள்ள நிலையில், சுகாதாரப் பராமரிப்பில் ஈடுபடும் பல நிறுவனங்களுக்கும், முன்னிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் பல சவால்களை தோற்றுவித்துள்ளது. பொறுப்பு வாய்ந்த வகையில், உயர் தரம் வாய்ந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை பரந்தளவு சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை தற்போது மிகவும் உயர்வாக அமைந்துள்ளது. தேசிய இடர்நிலையின் போது சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ளமையானது, ஆசிரி குழு வைத்தியசாலைகளில் பின்பற்றப்படும் உயர் நியம நோயாளர் பராமரிப்பு, இடர், பாதுகாப்பு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளன.

நோயாளர் பராமரிப்பின் போது தரம், பாதுகாப்பு நியமங்களை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அமைப்பான ACHSI, துரித மதிப்பீடு மற்றும் தர மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் எய்தப்படும் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு, அனைத்து மருத்துவ பிரிவில் சகல சிகிச்சை, செயற்பாடு மற்றும் கூட்டாண்மை அம்சங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கடுமையான தேவைப்பாடுகள் உள்ளடங்கியுள்ளன.

நான்கு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்பதுடன், பரிபூரண, வார முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்த அங்கிகாரம் வழங்கலுக்கான பகுப்பாய்வு, நான்கு ஆசிரி வைத்தியசாலைகளிலும் மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கடுமையான மதிப்பாய்வுகளின் போது, கூட்டாண்மை, சிகிச்சைசார் நிர்வாக அணியினர் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், நேரடி விஜயங்கள், வைத்தியசாலைகளில் சுற்றுப் பயணங்கள் போன்றன முன்னெடுக்கப்பட்டன. மருத்துவ அறிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன், சுகாதாரப்பராமரிப்புச் சேவை வழங்கல் தொடர்பில் ஈடுபடும் செயற்பாட்டு ஊழியர்களுடன் தகவல் திரட்டும் அமர்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த அங்கிகாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர். மஞ்சுள கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் முன்னோடி எனும் வகையில், நோயாளர் பராமரிப்பில் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பேணும் உயர் தரமான சேவைகளுக்காக, சுயாதீன வெளியக மதிப்பீட்டாளரிடமிருந்து இந்த அங்கிகாரத்தைப் பெற்றுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது நுகர்வோருக்கு நாம் வழங்கும் பராமரிப்பு சேவைகளுக்காக சர்வதேச அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைற்கல் சாதனையாக அமைந்துள்ளதுடன், சமூகத்துக்கு உயர்ந்த தரம் வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் தொடர்ச்சியாக நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மிக்க முக்கியமான பயணத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது” என்றார்.

நோயாளர் பாதுகாப்பு, சேவை மேம்படுத்தல், நோயாளர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் போன்ற பரந்த சேவைகள், செயற்பாடுகள் போன்றன இந்த தரச்சான்றிதழில் உள்ளடங்கியுள்ளன. நியமப்படுத்தப்பட்ட, ஆதாரம் அடிப்படையிலான, சீரான, பரிபூரண சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை நோயாளரின் சமய, கலாசார நம்பிக்கைகளின் பிரகாரம், நோயாளரின் உரிமைக்கு மதிப்பளித்து செயலாற்றல் போன்றனவும் இதில் அடங்கியுள்ளன.

2020 பெப்ரவரி மாதத்தில் ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் பாதுகாப்பான, வினைத்திறன் வாய்ந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக Joint Commission International (JCI) Gold Seal of Approval® அங்கிகாரம் மீள வழங்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, ஆசிரி சேர்ஜிகல், ஆசிரி மெடிகல் மற்றும் ஆசிரி காலி மற்றும் ஆசிரி மாத்தறை ஆகிய வைத்தியசாலைகளுக்கு இந்த ACHS சர்வதேச அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .