2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

’அருணலு சித்திரம்’ சித்திரப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு வெகுமதி

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி, தனது ஐந்தாவது 'அருணலு சித்திரம்' சிறுவர் சித்திரப் போட்டியை அண்மையில் மாபெரும் பரிசளிப்பு விழாவுடன் நிறைவு செய்தது. இந்த 'அருணலு சித்திரம்' சிறுவர் சித்திரப் போட்டியில் 137 சிறுவர் சிறுமியர் தமது கலைத்திறனை வெளிப்படுத்தியதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு 3 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க மற்றும் வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நான்கு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர் சிறுமியருக்காக பிரத்தியேகமாக, வங்கியின் பிரபல சிறுவர் சேமிப்புக் கணக்கான 'அருணலு' பதாகையின் கீழ் இந்தப் போட்டி நடத்தப்பட்டது, மேலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைச் சிறுவர்களுக்கும் இப்போட்டியில் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொமர்ஷல் வங்கி 137 வெற்றியாளர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பரிசளிப்பு விழாவிற்கு அழைத்தது. மூன்று வெளிநாட்டு வெற்றியாளர்களும் இணையத்தள நிகழ்வில் பங்கேற்று தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். தலா ரூ.10,000 முதல் ரூ.100,000 வரை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கொமர்ஷல் வங்கியில் சிறுவர் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் பணப்பரிசில்களுக்கு மேலதிகமாக விசேட பரிசில்களைப் பெற்றனர். இந்த வருடத்திற்கான போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட சித்திரங்களுக்கான தீர்ப்பு வழங்கும் பொறுப்பு பேராசிரியர் சுசிறிபால மாலிம்பொட தலைமையிலான நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கி 'அருணலு சித்திரம் கலைப் போட்டியை˜ 2017 இல் அறிமுகப்படுத்தியது. கொமர்ஷல் வங்கியின் முதன்மையான சிறுவர்கள் சேமிப்புக் கணக்கான, அருணலு அதன் பிறகு போட்டிக்கு பெயரிடப்பட்டதையடுத்து சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டி வீதத்தை வழங்குவதுடன் மற்றும் கணக்கு வைத்திருக்கும் சிறுவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அவர்களின் பாடசாலைகளில் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது அதிக உயர் புள்ளிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு விசேட பணப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க மற்றும் வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ பிரதிநிதிகளுடன் 2024 அருணலு சித்திரம் சிறுவர் கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் படத்தில் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X