2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அரச பொறியியல் கூட்டுத்தாபனம் - INSEE சீமெந்து உடன்படிக்கை கைச்சாத்து

Gavitha   / 2020 நவம்பர் 12 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, டொலமைட் கொள்வனவு செய்வதற்காக இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.  சீமெந்து உற்பத்தியின் போது டொலமைட் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், இந்த உடன்படிக்கையின் பிரகாரம், INSEE சீமெந்து நிறுவனத்துக்கு, மாத்தளையிலுள்ள இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கற்சுரங்கப்பகுதியிலிருந்து  டொலமைட்டை கொள்வனவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

INSEE சீமெந்தின் தவிசாளர் நந்தன ஏக்கநாயக்க மற்றும் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் ரட்னசிறி ஏக்கநாயக்க ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணம் மற்றும் மூலப்பொருட்கள் தொழிற்துறை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, அமைச்சின் அதிகாரிகள், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதி தவிசாளர் பாக்யா ஜயதிலக மற்றும் INSEE சீமெந்து நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் சரக்கு கையாளல் பணிப்பாளர் துசித் குணவர்னசூரிய, வெளிவிவகார செயற்பாடுகள் மற்றும் பிரிவுகள் அபிவிருத்தி தலைமை அதிகாரி சந்தன நானயக்கார ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த உடன்படிக்கை தொடர்பாக நந்தன ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்த உடன்படிக்கை அந்த அர்ப்பணிப்புக்கான மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது. உள்நாட்டு தொழிற்துறைகள் மற்றும் சமூகத்தினரின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார்.

மேலும், மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறு தொழிற்துறைகளை கட்டியெழுப்புவது மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதனூடாக, “சுபீட்சமான நோக்கு” எனும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் கருப்பொருளுக்கு வலுச் சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .