2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

அமானா லைஃப் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் விஸ்தரிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 13 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமானா லைஃப் இன்சூரன்ஸ், தனது புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட காப்புறுதித் தீர்வுகளை பரந்தளவில் அணுகச் செய்யும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு தனது சேவைகளை உத்தியோகபூர்வமாக விஸ்தரித்துள்ளது. இந்த விரிவாக்க பணிகளுக்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜிஹான் ராஜபக்ச மற்றும் காப்புறுதித் துறையில் சுமார் 21 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள விற்பனைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் புவிராஜ் ஆகியோர் தலைமைத்துவமளித்திருந்தனர்.

அவரின் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன், உயர் திறன் படைத்த அணிகள் மற்றும் திறமைகளை கட்டியெழுப்பல் போன்றவற்றுக்காக தமக்கென நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளார். மேலும், BSc(Hons), MBA, Certified Professional Marketer - Asia போன்ற உறுதியான கல்விசார் தகைமைகளைக் கொண்டுள்ள இவர், இந்தப் பிராந்தியங்களில் அமானா லைஃப்பின் செயற்பாடுகளுக்கு தமது நிபுணத்துவம் மற்றும் நோக்கத்தை சேர்த்துள்ளார்.

அமானா லைஃப் தமது தயாரிப்பு தெரிவுகளின் அங்கமாக, தங்க நிதியத்தை காப்புறுதிதாரர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. அதனூடாக, காப்புறுதி முதிர்வு அனுகூலத்தை தங்கமாக காப்புறுதிதாரர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம், பணத்துக்கு பதிலாக பெறுமதி குன்றாத உறுதியான மாற்றீட்டை காப்புறுதிதாரர்கள் பேண முடியும். இந்த பிரத்தியேகமான வழங்கலினூடாக, அமானா லைஃப் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் சமூகத்தாரின் தேவைகளையும், தெரிவுகளையும் அறிந்து, அதற்கேற்ற வகையில் தமது சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

தங்க நிதியத்துக்கு மேலதிகமாக, அமானா லைஃப் மூலமாக, பரந்தளவு காப்புறுதித் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் சிறுவர் கல்வித் திட்டங்கள், ஆயுள் மற்றும் சுகாதார பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நீண்ட கால சேமிப்புத் திட்டங்கள் போன்றன அடங்குகின்றன. இந்தத் தீர்வுகள், பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அமானா லைஃப்பின் ஒழுங்கு, வாடிக்கையாளர் மையப்படுத்திய சேவைக் கொள்கைகளின் பிரகாரம் அமைந்துள்ளன.

இந்த விரிவாக்கம் தொடர்பில் ராஜபக்ச குறிப்பிடுகையில், “வடக்கு மற்றும் கிழக்கில் எமது பிரசன்னம் என்பது, புவியியல் அமைவிட விரிவாக்கம் என்பதற்கு அப்பாலானது. உறவுகளை கட்டியெழுப்புவது, பொருத்தமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது மற்றும் எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது போன்றவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது. புத்தாக்கமான மற்றும் தங்கியிருக்கக்கூடிய நிதிசார் தீர்வுகளினூடாக தனிநபர்கள் மற்றும் குடும்பதாரின் எதிர்காலங்களை பேணுவதில் நம்பிக்கையை வென்ற பங்காளராக திகழ நாம் முயற்சிக்கின்றோம்.” என்றார்.

சமூக ஈடுபாடு மற்றும் பொருத்தமான தீர்வுகளினூடாக, இந்தப் பிராந்தியங்களில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த அமானா லைஃப் எதிர்பார்க்கின்றது. அனைத்து இலங்கையர்களும் தங்கியிருக்கக்கூடிய மற்றும் உள்ளடக்கமான காப்புறுதி சேவை வழங்குநராக திகழும் தமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .